20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Advertisement

பிரதம மந்திரி முத்ரா கடன் திட்டம் | Mudra Loan Scheme in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் பிரதம மந்திரி முத்ரா கடன் திட்டம் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த திட்டத்தில் ஒருவருக்கு 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறதாம். (2024 புதிய மத்திய பட்ஜெட் அறிவிப்பின் படி 10 லட்ச ரூபாயில் இருந்து 20 லட்ச ரூபாய் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்). குறிப்பாக இந்த கடன் பெற நாம் எதுவும் அடமானம் வைக்காமல் கடன் பெற முடியுமாம். சரி இந்த முத்ரா லோன் வாங்குவது எப்படி, இதற்கு என்ன எலிஜிபிலிட்டி, யாரெல்லாம் பயன்பெறலாம் போன்ற தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

திட்டத்தின் நோக்கம்:Mudra Loan Scheme

சொந்தமாக தொழில் செய்ய விரும்புவோருக்கு கடன் வழங்குவதற்காக பிரதமர் முத்ரா யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் வரை உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது. வேலை தேடுபவரை சுய தொழில் செய்ய ஊக்குவைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த திட்டம் கீழ் சிஷு முத்ரா, கிஷோர் முத்ரா, தருண் முத்ரா என்று மூன்று வகையான கடன்கள் வழங்கப்படுகிறது.

சிஷு முத்ரா திட்டம்:

சிறு தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு சிஷு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.50,000/- வரை கடன் பெற முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் 4950 ரூபாய் வருமானம் தரும் Post Office சேமிப்பு திட்டம்

கிஷோர் முத்ரா:

கிஷோர் முத்ரா திட்டத்தின் நீங்கள் 50,000/- முதல் 5 லட்சம் வரை கடன் பெற முடியும்.

தருண் முத்ரா:

இந்த தருண் முத்ரா திட்டத்தில் நீங்கள் 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை கடன் பெற முடியும். இந்த திட்டத்திற்கு எந்த விதமானம் உத்தரவாதமும் இல்லை, மேலும் பிராசஸிங் கட்டணமும் இல்லை.

வட்டி:

இந்த திட்டத்தில் வழங்கப்படும் கடன்களுக்கு குறைந்தபட்சம் 12% வட்டி விதிக்கப்படுகிறது.

தேவைப்படும் ஆவணங்கள்:

அடையாள சான்றிதழ்:

ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்ட் முதலியன தேவைப்படும்.

இருப்பிட சான்றிதழ்:

மின்சார பில், தொலைபேசி பில், எரிவாயு பில், தண்ணீர் பில், முதலியன தேவைப்படும்.

வணிக சான்று:

வியாபார பதிவு சான்றிதழ்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

அருகில் உள்ள வங்கிக் கிளைகளிலேயே இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம். வங்கியில் உங்களுக்கு ஒரு விண்ணப்படிவம் கொடுப்பார்கள். அந்த விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி தேவையான சான்றிதல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 ஆண்டில் 14 லட்சம் லாபம் தரும் சேமிப்பு திட்டம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement