1000 ரூபாய் செலுத்தி  மாதந்தோறும் 12,000 ரூபாய் வருமானம் பெறும் மத்திய அரசின் திட்டம்..

Advertisement

தேசிய ஓய்வூதிய திட்டம்

தேசிய ஓய்வூதியத் திட்டம் அல்லது NPS திட்டம் என்பது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட முதலீட்டு மற்றும் ஓய்வூதியத் திட்டமாகும். இந்தத் திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) ஒழுங்குபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தேசிய ஓய்வூதியத் திட்டம் இந்திய மூத்த குடிமக்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக இந்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது. NPS திட்டம் ஈர்க்கக்கூடிய நீண்ட கால சேமிப்பு விருப்பங்களை வழங்குகிறது. இந்த திட்டத்தை பற்றிய முழு விவரங்களை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..

NPS Scheme Details:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

யாரெல்லாம் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்:

அரசின் இந்த திட்டத்தில்  அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழை மக்கள் என அனைவருமே பயன் அடையாலம்.  வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும்.

வயது தகுதி:

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 60 வயது வரை உள்ள இந்திய குடிமகன் அனைவரும் இந்த திட்டத்தில் சேரலாம். இந்த திட்டம் 60 வயதில் முதிர்வடைகிறது, ஆனால் நீங்கள் விருப்பப்பட்டால் 70 வயது வரை நீட்டி கொள்ளலாம்.

ஏப்ரல் முதல் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் ரூ.5,39,449 ரூபாய் பெறும் பெண்களுக்கான சிறப்பு திட்டம்

எப்படி பயனடைவது:

  • தேசியமயமாக்கப்பட்ட வங்கி
  • தபால் துறை

திட்டத்தின் வகைகள்:

இந்த திட்டத்தில்  Tier 1, Tier 2, இரண்டு வகைகள் உள்ளது.

Tier 1:

Tier 1 கணக்கை அனைவரும் இந்த வகையில் தான் பயன் பெற முடியும். இதில் டெபாசிட் செய்த தொகையை 60 வயதிற்கு பிறகு தான் பெற முடியும்.

இந்த கணக்கில் நீங்கள் குறைந்தபட்சம் தொகை 500 ரூபாய், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம்.

Tier 2:

Tier 2 கணக்கை நீங்கள் விருப்பப்பட்டால் ஓபன் செய்து கொள்ளலாம். இதில் நீங்கள் டெபாசிட் செய்த தொகையை எப்போ வேண்டுமானாலும் widraw செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாயும், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம்.

தபால் துறையில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

எவ்வளவு ஓய்வூதியம் பெறலாம்:

20 வயதில் டெபாசிட் செய்தால்:

இந்த திட்டத்தில் 20 வயதில் ஒருவர் இணைந்து ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் செலுத்தி வந்தால் 60 வயதில் 4,80,000 ரூபாய் டெபாசிட் செய்திருப்பார். இதற்கு ரிட்டன் தொகையாக 37,72,250 ரூபாய் வழங்குகிறார்கள். 60 வயதில் 42,52,250 ரூபாய் கணக்கில் இருக்கும்.

இந்த தொகையை நீங்கள் 60 வயதில் 60% தொகையான 25,51,350 ரூபாயை வித்ட்ராவ்ல் செய்து கொள்ளலாம். 40% தொகையான 17,00,900 ரூபாயை பென்ஷன் fund-ல் இன்வெஸ்ட்மென்ட் செய்து இதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் 12,756 ரூபாய் வாழ்நாள் முழுவதும் பென்ஷனாக பெறலாம்.

25 வயதில் டெபாசிட் செய்தால்:

இந்த திட்டத்தில் 25 வயதில் ஒருவர் இணைந்து ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் செலுத்தி வந்தால் 60 வயதில் 21,00,000 ரூபாய் டெபாசிட் செய்திருப்பார். இதற்கு ரிட்டன் தொகையாக 1,14,73,599 ரூபாய் வழங்குகிறார்கள். 60 வயதில் 1,35,73,599 ரூபாய் கணக்கில் இருக்கும்.

இந்த தொகையை நீங்கள் 60 வயதில் 60% தொகையான 81,44,159 ரூபாயை வித்ட்ராவ்ல் செய்து கொள்ளலாம். 40% தொகையான 54,29,439 ரூபாயை பென்ஷன் Fund-ல் இன்வெஸ்ட்மென்ட் செய்து இதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் 40,720 ரூபாய் வாழ்நாள் முழுவதும் பென்ஷனாக பெறலாம்.

தபால் துறையில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தி வட்டி மட்டுமே 2,69,000 ரூபாய் பெறக்கூடிய அருமையான சேமிப்பு திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement