National Savings Certificate in Tamil
பணத்தை சம்பாதிப்பது முக்கியமில்லை. அதை சிறந்த வழியில் சேமிப்பது ரொம்ப முக்கியமானது. சேமிப்பதில் பல கேள்விகள் இருக்கும். இதில் சேமிப்பது, இதில் சேமித்தால் வட்டி அதிகமாக கிடைக்கும் போன்ற பல கேள்விகள் இருக்கும். தபால் துறையில் பல திட்டங்கள் உள்ளது அதில் ஒன்று தான் இன்றைய பதிவில் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள போகின்றோம். அதனை பற்றிய முழு தகவலையும் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளவும்.
தேசிய சேமிப்பு பத்திர திட்டம்:
யாரெல்லாம் பயனடையலாம்:
இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமகன் அனைவரும் பயனடையலாம். 18 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் பெற்றோர் மூலம் ஜாயிண்ட் அக்கவுண்டாக சேரலாம். ஒரு நபர் ஒரு சேமிப்பு பத்திர திட்டம் தான் வாங்க இல்லை. எத்தனை சேமிப்பு பத்திர திட்டம் வேண்டுமானாலும் வாங்கி சேமிக்கலாம்.
முதலீடு:
குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் செலுத்தி கணக்கை ஆரம்பிக்கலாம்.
முதிர்வு காலம்:
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். 5 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் சேமித்த சேமிப்பு மற்றும் அதற்கான வட்டியும் சேர்த்து வழங்கப்படும்.
போஸ்ட் ஆபிசில் ஒரு வருடத்திற்கு 299 செலுத்தினால் உங்களுக்கு 10 லட்சம் கிடைக்கும்..!
வட்டி:
இந்த திட்டத்திற்கு 7% கொடுக்கிறார்கள். நீங்கள் இந்த சேமிப்பை ஆரம்பிக்கும் போது எவ்வளவு வட்டியோ அந்த வட்டி விகிதமானது 5 வருடத்திற்கு மாற்றம் இல்லாமல் இருக்கும்.
பணமாற்றும் வசதி:
ஒரு தபால் துறையில் உள்ள உள்ள இந்த தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தை ஓபன் செய்திருக்கிறீர்கள் என்றால் அதை தமிழ்நாட்டில் உள்ள எந்த தபால் துறைக்கு வேண்டுமானாலும் Transfer செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஒருவரின் அக்கவுண்டில் இருந்து மற்றொரு அக்கவுண்டில் மாற்றுவதற்கு வசதி வாய்ப்பு உள்ளது.
முதலீடு மற்றும் கிடைக்கும் தொகை:
முதலீடு செய்யும் தொகை | 5 வருடம் பிறகு கிடைக்கும் தொகை |
ரூ.1,00,000/- | ரூ.1,40,255/- |
ரூ.3,00,000/- | ரூ.4,20,755/- |
ரூ.5,00,000/- | ரூ.7,01,275/- |
ரூ.10, 00,000/- | ரூ.14,02,551/- |
இதை தவிர வேறு தொகையினையும் முதலீடு செய்யலாம். அதற்கேற்ற வட்டி விகிதம் அதிகரிக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்து அந்த பத்திரத்தினை வாங்கி திரும்பி கொடுக்கும் போது முதலீடு செய்த தொகையும் அதன் வட்டியும் சேர்ந்து உங்களுக்கு 5 வருடம் பிறகு கிடைக்கும். இந்த திட்டம் மிகவும் பாதுகாப்பான திட்டமே ஆகும்.
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |