5 வருடத்தில் ரூ.2,80,000/- பெற அருமையான சேமிப்பு திட்டம்..!

Advertisement

தேசிய சேமிப்பு பத்திர திட்டம் | National Savings Certificate Post Office 

National Savings Certificate In Tamil: அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவில் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தின் விவரங்களை பற்றித்தான்  விரிவாக பார்க்கப்போகிறோம். இந்த திட்டமானது குறிப்பிட்ட தொகையினை சேமித்து அஞ்சலகத்தில் சேமிப்பு பத்திரத்தினை வாங்கி 5 வருடத்திற்கு பிறகு பத்திரத்தினை கொடுக்கும் போது செலுத்திய தொகை மற்றும் அதன் வட்டியுடன் கிடைக்கும் சிறந்த சேமிப்பு திட்டம். இந்த சேமிப்பு திட்டத்தில் நாம் கடனுதவியும் பெற்றுக்கொள்ளலாம்.

சரி வாங்க நண்பர்களே இப்போது இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன் பெறலாம், திட்டத்தில் சேருவதற்கு தேவையான ஆவணங்கள், இந்த சேமிப்பு திட்டத்தில் எவ்வளவு தொகை செலுத்தினால் வட்டியுடன் கிடைக்கும் தொகை விவரம் அனைத்தையும் இந்த பதிவில் முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!

அஞ்சல் துறையின் தொடர் வைப்பு நிதி திட்டம்..! Recurring Deposit In Post Office..!

National Savings Certificate In Tamil

சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம்:

இந்த தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள்.

திட்டத்தில் பயன்பெற தகுதிகள்: 

தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் சேருவதற்கு விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

வயது தகுதி:

விண்ணப்பதாரரின் வயது 18 ஆண்டுகள் முதல் இருக்கலாம். இந்த திட்டத்தில் ஜாயிண்ட் அக்கவுண்ட் ஓபன் செய்ய முடியாது.

மைனர் அக்கவுண்டாக இருந்தால் அவர்களுக்கு பெற்றோர் மூலம் சேமிப்பு திட்டத்தினை ஓபன் செய்யலாம்.

தேவையான ஆவணம்:

இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்வதற்கு ஆதார் / பான் கார்டு, பாஸ்போர்ட் போட்டோ ஒன்று தேவைப்படும் ஆவணமாகும்.

வட்டி விகிதம்:

இந்த சேமிப்பு திட்டத்தில் 7.7%  வட்டி அஞ்சலகத்தில் கொடுக்கிறார்கள். அதோடு ஒவ்வொரு வருடத்திற்கும் கூட்டு வட்டி(Compound interest) இந்த சேமிப்பு திட்டத்தின் மூலம் கிடைக்கும்.

வட்டி விகிதமானது 5 வருடத்திற்கு மாற்றம் இல்லாமல் இருக்கும்.

சேமிப்பு திட்டத்தின் முதலீட்டு தொகை:

சேமிப்பு கணக்கினை துவங்குவதற்கு முதலில் குறைந்தபட்ச தொகை ரூ.100/- செலுத்தி கணக்கினை தொடங்கலாம். ரூ.100/- செலுத்தி சேமிப்பு பத்திரத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் அதிகபட்ச தொகை எதுவும் இல்லை.

வரி நன்மை:

தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் நீங்கள் 1.5 லட்சம் முதலீடு செய்து இருக்கின்றீர்கள் என்றால் 80C என்ற பிரிவின் படி வரியினை பெற்றுக்கொள்ளலாம்.

5 வருடம் பிறகு செலுத்திய தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு TDS(Tax Deducted At Source) வரிகள் எதுவும் பிடிக்கப்படாது.

கடன் வசதி:

இந்த திட்டத்தில் கடனுதவியும் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் முதலீடு செய்யும் தொகையில் 60% கடனுதவி பெறலாம்.

பண மாற்றும் வசதி:

இந்த திட்டத்தில் ஒருவரின் அக்கவுண்டில் இருந்து மற்றொரு அக்கவுண்டில் மாற்றுவதற்கு வசதி வாய்ப்பு உள்ளது.

முதலீடு மற்றும் கிடைக்கும் தொகை:

முதலீடு செய்யும் தொகை  5 வருடம் பிறகு கிடைக்கும் தொகை 
ரூ.2,00,000/- ரூ.2,89,807/-

இதை தவிர வேறு தொகையினையும் முதலீடு செய்யலாம். அதற்கேற்ற வட்டி விகிதம் அதிகரிக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்து அந்த பத்திரத்தினை வாங்கி திரும்பி கொடுக்கும் போது முதலீடு செய்த தொகையும் அதன் வட்டியும் சேர்ந்து உங்களுக்கு 5 வருடம் பிறகு கிடைக்கும். இந்த திட்டம் மிகவும் பாதுகாப்பான திட்டமே ஆகும்.

இது போன்ற பல சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்துக்கொள்ள 👉பொதுநலம்.காம் இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement