5 ஆண்டில் 14 லட்சம் லாபம் தரும் சேமிப்பு திட்டம்..!

5 ஆண்டில் 14 லட்சம் வருமானம் தரும் சேமிப்பு திட்டம் | National Savings Scheme in Tamil

National Savings Scheme in Tamil – பணம் என்பது நமது வாழ்க்கைக்கு தேவைப்படும் மிக முக்கியமான ஒரு விஷயம் ஆகும். பலர் இந்த பணத்தை தேடி தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. அப்படி ஓடி ஓடி சம்பாதிக்கும் பணத்தை தேவையுள்ள விஷயங்களுக்கு செலவு செய்து விட்டு,  மீதமிருக்கும் பணத்தை ஏதாவது பயனுள்ள சேமிப்பு திட்டத்தில் சேமிக்க வேண்டும். அந்த வகையில் அஞ்சல் அலுவலகத்தில் பல வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் தேசிய சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் வட்டி அதிகமாக கிடைக்கின்றன. ஆக இவற்றில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். சரி வாங்க இந்த சேமிப்பு திட்டம் குறித்த தகவலை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

தகுதி:

இந்திய மக்கள் யாராக இருந்தாலும் சரி, இந்த சேமிப்பு திட்டத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். உங்கள் முதலீட்டு தொகைக்கான உத்தரவாதம் 100% கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மத்திய அரசின் வீடு வழங்கும் திட்டம் 2022-2023..!

எவ்வளவு வட்டி கிடைக்கும்:

national savings certificate

இந்த திட்டத்தில் உங்களுக்கு 6.8% சதவீதம் வட்டி கிடைக்கும். இந்த வட்டியுடன் கூட்டு வட்டியும் வழக்கப்படுகிறதாம்.

உதாரணத்திற்கு:

நீங்கள் இந்த சேமிப்பு திட்டத்தில் 10,000/- ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு வருடத்திற்கு 680 ரூபாய் வட்டி வழங்கப்படும். ஆக உங்கள் சேமிப்பில் ஒரு வருடத்திற்கு பிறகு 10,680/- ரூபாய் வட்டி கிடைக்கும்.

அதுவே இரண்டாவது வருடத்தை தொடரும் போது  இந்த 10,680/- ரூபாயுடன் கூட்டு வட்டியாக 726 ரூபாய் வட்டி கிடைக்கும். ஆக இரண்டு வருடத்திற்கு பிறகு உங்கள் சேமிப்பில் இப்பொழுது 11,406/- ரூபாய் இருக்கும்.

முதலீடு:

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் தொடங்கி அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். நீங்கள் முதலீடு செய்யும் தொகையை 5 வருடத்திற்கு பிறகு தான் திரும்ப பெற முடியும்.

இத்திட்டத்தின் நன்மை:

இந்த திட்டத்தில் 5 வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் தொகையை முதலீடு செய்யும் போது. 5 வருடம் கழித்து வட்டியுடன் உங்களுக்கு 6,94,000/- ரூபாய் லாபமாக கிடைக்கும். கிட்டத்தட்ட உங்களுக்கு 1.94 லட்சம் கூடுதலாக லாபம் கிடைக்கிறது.

அதுவே நீங்கள் 10 லட்சம் முதலீடு செய்யும் போது உங்களுக்கு 14,00,000/- லாபம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரூ.50 முதலீடு செய்து ரூ.35 லட்சம் வரை பெரும் அஞ்சலகத்தின் அசத்தலான திட்டம்..!

இந்த சேமிப்பு திட்டத்தில் எப்படி இணைவது?

உங்கள் ஊரில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று இந்த தேசிய சேமிப்பு திட்டம் குறித்த விவரங்களில் பற்றி அங்கு இருக்கும் அலுவலர்களிடம் கேட்டீர்கள் என்றாலே உங்களுக்கு அந்த திட்டம் குறித்த அனைத்து விவரங்கள் பற்றி கூறுவார்கள். பிறகு அந்த திட்டத்தில் நீங்கள் இணைந்து முதலீடு செய்யலாம்.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil