New PPF Withdrawal Rules 2023
நாம் வாழும் இந்த உலகில் இன்றைய காலகட்டத்தில் மிக மிக முதன்மையாக திகழ்வது பணம் தான். அதாவது பணம் இல்லாத ஒருவரை இந்த சமுதாயம் மனிதனாக கூட மதிப்பதில்லை. அதனால் நமது வாழ்க்கைக்கு தேவையான பணத்தை அனைவருமே மிக மிக கஷ்ட்டப்பட்டு சம்பாதிப்போம். அப்படி நாம் சம்பாதிக்கும் பணம் நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. அதனால் நமக்கு மிகவும் கடினமான சூழலில் பணம் தேவைப்படுகிறது என்றால் நாம் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே தான் நமது எதிர்காலத்திற்க்காக சிறிதளவு சேமிக்க வேண்டும். அப்படி சேமிக்கும் பணத்தை சரியான வழியில் தான் சேமித்து உள்ளோமா. அப்படி சேமிக்கும் போது அதில் நமக்கு உள்ள சாதக பாதகங்கள் என்ன என்ன என்பதனை தெரிந்து வைத்திருப்பது அவசியம். இன்றைய பதிவில் இந்திய அரசு PPF திட்டத்தில் புதிய விதிகளை இணைத்துள்ளது அதனை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
PPF – ன் புதிய விதிகள்:
ஒரு கணக்கு வைத்திருப்பவர், குறிப்பிட்ட காரணங்களுக்காக, தங்கள் சொந்தக் கணக்கையோ அல்லது மைனர் கணக்கையோ முன்கூட்டியே மூடுமாறு கோரலாம்.
கணக்கு வைத்திருப்பவர் அல்லது அவரின் குடும்பத்தினர் (கணவன், மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோர்) உயிருக்கு ஆபத்தான நோய்க்கான சிகிச்சை சரியான ஆவணங்கள் மூலம் கணக்கை மூட கோரலாம்.
கணக்கு வைத்திருப்பவர் அல்லது அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் கல்விக்காக உரிய ஆவணங்கள் உடன் கணக்கை திருப்ப பெற கூறலாம்.
கணக்கு வைத்திருப்பவர் இடமாற்றம் செய்யும்போதும் குறிப்பிட்ட ஆவணங்களுடன் கணக்கை முடிக்கலாம்.
இருப்பினும், இந்த திட்டத்தின் கீழ் கணக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன் மூட முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
PPF கணக்கை முன்கூட்டியே மூடப்படுவதற்கான புதிய விதி மற்றும் வட்டி விகிதங்கள்:
PPF கணக்கை முன்கூட்டியே மூடுவதன் மூலம் வரவு வைக்கப்பட்டுள்ள வட்டி விகிதத்தில் இருந்து 1% குறைவான வட்டியுடன் கணக்கு முடிக்கப்படும்.
ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி PPFயில் செலுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் வட்டி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
2019 இல், 13 வது பத்தியில், 2 வது விதிமுறையில், கணக்கு நீட்டிப்பு தேதி இப்போது கணக்கு தொடங்கப்பட்ட தேதியில் இருந்து 5 வருடங்கள் என மாற்றப்பட்டுள்ளது.
5 ஆண்டுகள் தொடக்கத்தில் இருந்தது அவ்வப்போது வரவு வைக்கப்படும் வட்டியில் 1% குறைவாக வரவு வைக்கப்படும் என்பதை குறிக்கிறது.
கணக்கை நீட்டித்து 15 முடிவில் கணக்கை மூட நினைப்பவர்களுக்கு அவர்களின் கணக்கை முடிப்பதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட முந்தைய மாதத்தின் கடைசி நாள் வரை, முழு நிலுவைத் தொகையையும் வட்டியையும் செலுத்தப்படும்.
தபால் துறையில் மாதம் 3,000 ரூபாய் சேமித்தால் 16,16,288/- SSA திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |