என்பிஎஸ் வாத்சல்யா (NPS Vatsalya) திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா.?

Advertisement

NPS Vatsalya Scheme in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் புதிதாக கொண்டுவரப்பட்ட என்பிஎஸ் வாத்சல்யா (NPS Vatsalya) திட்டம் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குழந்தைகளுக்கான ஓய்வூதிய திட்டமான NPS வாத்சால்யா திட்டம் பற்றி அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து செப்டம்பர் 18, 2024 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் NPS வாத்சால்யா திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளார்.

NPS Vatsalya திட்டத்தின் தொடக்க விழாவின்போது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் NPS வாத்சால்யா திட்டத்தில் சேருவதற்கான ஆன்லைன் தளத்தை தொடங்கி வைப்பார். மேலும், நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) அட்டைகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டம் யாருக்கும் பயனளிக்கும்.? இத்திட்டத்தில் சேர என்னென்ன தகுதிகள் வேண்டும்.? போன்ற இத்திட்டம் பற்றிய விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

NPS Vatsalya Scheme Details in Tamil:

NPS Vatsalya Scheme in Tamil

  • NPS வாத்சால்யா திட்டம் என்பது, மோடி அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆகும். குழந்தைகளின் எதிர்கால பணத்தேவையை கருத்தில் கொண்டு இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பெயரில் கணக்கை தொடங்கலாம்.
  • இத்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1000 வரை முதலீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்திற்கு கூட்டு வட்டி கிடைக்கிறது.
  • குழந்தைகளுக்கு 18 வயது வந்தவுடன், இந்த கணக்கை எளிதாக வழக்கமான NPS கணக்காக மாற்றி கொள்ளலாம்.
  •  இத்திட்டம் ஆனது, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் இயங்குகிறது.
  • இத்திட்டம் ஆனது, குழந்தைகள் வளர்ந்து, முதலீடு செய்யும் வயது வரும்வரை அவர்களுக்கு நிதி உதவியை அளிக்கும் வகையில் உள்ளது.’

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

தகுதிகள்| What is NPS Vatsalya Scheme Eligibility in Tamil:

நாட்டிலுள்ள 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NPS வாத்சல்யா திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது.?

  • அருகில் உள்ள வங்கிகள் அல்லது இந்திய அஞ்சல் அலுவலங்களுக்கு சென்று NPS வாத்சல்யா திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும், ஆன்லைன் மூலமாகவும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

NPS வாத்சல்யா திட்டத்தில் சேர தேவையான ஆவணங்கள்:

  • அடையாள சான்றுகள்
  • முகவரி சான்றுகள்
  • குழந்தை பிறந்த சான்றிதல்

பெண்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் அரசின் அசத்தலான திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement