5 வருடத்தில் Rs.14,50,000/- தரும் தபால் நிலையத்தின் அசத்தலான திட்டம்..!

Advertisement

Nsc New Interest Maturity Post Office in Tamil

நண்பர்களே நீங்கள் பணம் சேமித்து வைத்திருக்கிறீர்கள் என்றால், அதனை சரியான சேமிப்பு திட்டத்தில் சேமித்து, அதற்கான வட்டியை பெறுங்கள். அப்போது தான் அதிக லாபத்தை பெற முடியும். சிலர் வங்கிக்கு செல்வது போஸ்ட ஆபிஸ் செல்வது என்றால் கொஞ்சம் கடினமாக நினைக்கிறார்கள். ஏனென்றால் அங்கு நேரம் அதிகம் செலவு செய்வது போல் இருக்கும். அதேபோல் அதில் முதலீடு செய்வது என்றால் நிறைய பணம் தேவைப்படும். அதேபோல் நிறைய ஆவணம் தேவைப்படும், நிறைய நாட்கள் அதற்கான நேரத்தை செலவு செய்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. போஸ்ட் ஆபிஸ் உள்ள Nsc திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் பார்க்க முடியும். ஆகவே அந்த திட்டத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

Nsc New Interest Maturity Post Office in Tamil:

போஸ்ட் ஆபிஸில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை பொது மக்களுக்காக வழங்குகிறார்கள். அதில் ஒன்று இந்த National Savings Certificate திட்டம் ஆகும். இதில் முதலீடு செய்தால் வட்டியும், முதிர்வு தொகையும் அதிகமாக இருக்கும்.

இந்த திட்டம்  ஒரு முறை முதலீடு திட்டம் ஆகும். அதாவது இந்த கணக்கை திறக்கும் போது மட்டும் தான் முதலீடு தொகை செலுத்த முடியும். இந்த திட்டத்தில் இடைப்பட்ட காலத்தில் எந்த வித தொகையையும் செலுத்த தேவை இல்லை.

மத்திய அரசு பெண்களுக்காக அறிமுகம் செய்த புதிய சேமிப்பு திட்டம்

யார் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்:

18 வயது பூர்த்தி ஆன இந்திய குடிமக்கள் அனைவருமே இந்த திட்டத்தில் சேரலாம். மைனர் குழந்தைங்கள் என்றால் அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் இந்த திட்டத்தில் சேரலாம்.

முதிர்வு காலம்:

இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 வருடம் ஆகும். இந்த திட்டத்தின் விவரங்களை பயன்படுத்தி வங்கியில் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

முதலீடு தொகை:

இந்த திட்டத்தில் 1000 ரூபாயிலிருந்து எவ்வளவு தொகை வேண்டுமென்றாலும் செலுத்தி கணக்கை துவங்கலாம்.

ஏப்ரல் 4 தேதி முதல் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் ரூ.5,39,449 ரூபாய் வரை பெற முடியும்

வட்டி:

இந்த திட்டத்தில் புதிய வட்டி 7.70 சதவீதம் வழங்குகிறார்கள். இந்த வட்டியை ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை வழங்குகிறார்கள். இந்த வட்டியை அடுத்த 5 வருடம் வரை வழங்குவார்கள்.

இந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

டெபாசிட் தொகை  வட்டி  மொத்த தொகை 
Rs.1,00,000/- Rs.44,903/- Rs.1,44,903/-
Rs.3,00,000/- Rs.1,34,710/- Rs.4,34,710/-
Rs.5,00,000/- Rs.2,24,517/- Rs.7,24,517/-
Rs.10,00,000/- Rs.4,49,034/- Rs.14,49,034/-

 

60,000/- ரூபாய் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement