NSC Scheme in Post Office in Tamil
பண கஷ்டம் என்பது அனைவருக்கும் இருக்கும் அல்லவா..? ஆனால் ஏதாவது ஒரு நேரத்தில் கை நிறைய பணம் சம்பாதித்து கொண்டு இருப்போம். அதேபோல் அனைவருமே சேமிப்பது என்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அனைவருக்குமே கஷ்டமான காலம் என்று ஒன்று வரும். அந்த நேரத்தில் நாம் சேமிக்கும் பணம் உதவும். அதனால் நீங்கள் சம்பாதிக்கும் போது அதில் கொஞ்சம் பணத்தை சேமிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
நாம் அதிகமாக போஸ்ட் ஆபிஸில் தான் சேமித்து வருகின்றோம். அப்படி இருக்கும் போது வாடிக்கையாளர்களை இன்னும் மகிழ்விக்கும் வகையில் புதிய புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அதனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம். அதுவும் 5 வருடத்தில் 70,000 ஆயிரம் வரை கிடைக்கும் அருமையான திட்டத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
NSC Scheme in Post Office in Tamil:
குறைந்த முதலீட்டில் நல்ல வருமானம் கிடைக்கவேண்டும் என்றால் போஸ்ட் ஆபிஸில் NSC திட்டத்தில் சேரலாம். இதில் குறைந்தபட்சமாக 1000 செலுத்தி கணக்கை துவக்கலாம்.
வயது தகுதி:
இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தி செய்தவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.
வட்டி விகிதம்:
இந்த திட்டத்தில் 7 சதவீதம் வட்டி பெறலாம். மேலும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் வட்டி கணக்கீடு செய்வதால் இந்த திட்டத்தின் மூலம் நல்ல வருமானம் செலுத்த முடியும். மேலும் இதில் முதிர்வு காலம் முடிந்த பிறகு அதற்கான வட்டியையும், அசலையும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திட்டம் அதிகபட்சமாக முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி பெற முடியும் என்பதை தெளிவாக பார்த்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
முதிர்வு காலம் | டெபாசிட் தொகை | வட்டி | மொத்தம் |
5 வருடம் | 1,00,000 | Rs.40,255/- | Rs.1,40,255/- |
5 வருடம் | 3,00,000 | Rs.1,20,765/- | Rs.4,20,765 |
5 வருடம் | 5,00,000 | Rs.2,01,275/- | Rs.7,01,275 |
5 வருடம் | 10,00,000 | Rs.4,02,551/- | Rs.14,02,551 |
400 நாட்களில் 45,000 ரூபாய் வட்டி தரும் இந்தியன் வங்கியின் திட்டம்.! ஏப்ரல் 30 கடைசி தேதி
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |