PICME நம்பர் இருந்தால் தான் பிறப்பு சான்றிதழ் வாங்க முடியுமா.?

Advertisement

PICME Number in Tamil

PICME என்பது கர்ப்பம் மற்றும் குழந்தை கூட்டு கண்காணிப்பு & மதிப்பீடு ஆகும். அனைத்து கர்ப்பிணிப் பெண்களையும் கண்காணிக்க தமிழக அரசால் தொடங்கப்பட்ட ஒரு அமைப்புதான் PICME. இந்த PICME நம்பர் என்றால் என்ன, இதனை பதிவு செய்வது எப்படி இதனால் என்ன நன்மைகள் போன்றவற்றை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

PICME Full Form:

PICME- Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation என்பது விரிவாக்கமாக இருக்கிறது.

PICME Benefits:

இந்த நம்பர் மூலம் நமக்கு என்ன நன்மைகள் என்று அறிந்து கொள்வோம்.

  • இந்த நம்பர் மூலமாக அரசாங்கமானது உங்களுடைய கர்ப்பம் நல்லபடியாக இருக்கிறதா என்பதை கண்காணிப்பதற்கு உதவுகிறது.
  • PICME இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நன்மைத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறலாம்.
  • இந்த நம்பர் இருந்தால் தான் குழந்தைக்கு பிறந்த சான்றிதழ் வாங்க முடியும்.

PICME Registration Documents Needed:

வாக்காளர் அட்டை

ஆதார் கார்டு

ரேஷன் கார்டு

 திருமண சான்றிதழ்

 வங்கி கணக்கு புத்தகம்

 ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டு

How To Registration PICME:

PICME நம்பரை பதிவு செய்வதற்கு நான்கு வழிகள் இருக்கிறது, அதனை ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோம்.

  1.  https://picme.tn.gov.in/picme_public என்ற இணையத்தளத்தில்  தேவையான விவரங்களை உள்ளிடுவதன் மூலம் தாயே ஆன்லைன் சுய-பதிவைச் செய்யலாம். மேலே உள்ள செயல்முறை முடிந்ததும், முன்பதிவு ஐடியுடன் ஒரு ஒப்புகை உருவாக்கப்படும்.
  2. கர்ப்பிணித் தாய் அருகில் உள்ள இ-சேவா மையத்தை அணுகி தனது கர்ப்பத்தை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.
  3. கர்ப்பிணித் தாய் “102” என்ற இலவச எண்ணை அழைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
  4. கர்ப்பிணித் தாய் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு முடிந்ததும், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு மெசேஜ் அனுப்பப்படும். முன்பதிவு விவரங்கள் சம்பந்தப்பட்ட கிராம சுகாதார செவிலியர் / நகர்ப்புற சுகாதார செவிலியர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் கர்ப்பிணியை தொடர்பு கொண்டு பதிவு செய்வார்கள். பதிவு முடிந்ததும் தாய்க்கு RCH ஐடி வழங்கப்படும்.

கர்ப்பிணி பெண்களுக்கு Rs. 11,000/- தரும் அரசு திட்டம்..! Apply செய்வது எப்படி

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement