Single Parent Scheme in Tamilnadu
மக்களின் நலன் கருதி அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில் பிரதமரின் PM CARES திட்டத்தில் குழந்தைகளுக்கு மாதம் 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது. குறிப்பாகக் கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில், இந்த நோயால் பெற்றோரை இழந்தக் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தத் தொகையைப் பெற குழந்தைகள் விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்துப் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
எப்போது இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது:
கொரோனா பாதிப்பு காலத்தில் 2020 மார்ச் 11 முதல் 2022 பிப்ரவரி 28 வரை கொரோனாவால் இரண்டு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் (PM CARES for Children) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மாதந்தோறும் 4000 ரூபாய் உதவி தொகை:
பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4000 ரூபாய் வழங்கப்படும்.
23 வயதை எட்டிய பிறகு, குழந்தைக்கு 10 லட்சம் ரூபாய் கிடைக்கும், அது அவரது மாத வருமானத் திட்டக் கணக்கில் சேரும், அங்கிருந்து அவர்கள் மாதாந்திர உதவித்தொகையைப் பெறலாம், என்றார். மேலும் கல்வி உதவித் தொகை, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
இந்தத் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாற்றப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி.?
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு https://pmcaresforchildren.in/ என்ற இணையதளத்துக்கு சேடணறு விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- குடியிருப்பு சான்றிதழ்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- கைபேசி எண்
- மின்னஞ்சல் முகவரி
- பெற்றோரின் இறப்பு சான்றிதழ்
- கோவிட்-19 நேர்மறை அறிக்கை போன்றவை
திட்டத்தின் நன்மைகள்:
1.கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதாந்திர உதவித்தொகையாக ரூ.4000 வழங்கப்படுகிறது.
2. இந்த திடட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு 23 வயதாகும் போது, PM Cares நிதியில் இருந்து மொத்தமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
3. இந்தக் குழந்தைகளுக்கு மத்திய அரசு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது.
4. இதன் கீழ், குழந்தைகள் உயர்கல்விக்கான கடனைப் பெறலாம். அதற்கான வட்டி பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து வழங்கப்படும்.
5. இந்த குழந்தைகளுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 18 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும்.
6. பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து காப்பீட்டு பிரீமியம் செலுத்தப்படும்.
7. பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அருகில் உள்ள மத்திய அரசின் பள்ளி அல்லது தனியார் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்.
8. சைனிக் பள்ளி மற்றும் நவோதயா வித்யாலயா போன்ற மத்திய அரசின் எந்தவொரு போர்டிங் பள்ளியிலும் 11 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.
9. குழந்தை தனது பாதுகாவலருடன் அல்லது வேறு யாரேனும் குடும்ப உறுப்பினருடன் வசித்து வந்தால், அவர் அருகிலுள்ள கேந்திரிய வித்யாலயா அல்லது தனியார் பள்ளியிலும் சேர்க்கை பெறுவார்.
10. குழந்தை தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டால், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், அவரது கட்டணம் PM Cares நிதியில் இருந்து வழங்கப்படும் மற்றும் அவரது பள்ளி சீருடை, புத்தகங்கள் மற்றும் நகல்களுக்கான செலவுகளும் செலுத்தப்படும்.
மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்
மத்திய அரசின் தொழில் செய்வோருக்காக 15,000 ரூபாய் வழங்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |