PM E Drive Scheme in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் PM E Drive Scheme பற்றிய விவரங்களை பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் மின்சார வாகனத்தின் பயன்பாடுகளை அதிகரிக்க மத்திய அரசு PM E Drive திட்டத்தினை செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை ஒன்பது ஆண்டுகளாக இயங்கி வந்த ஃபிளாக்ஷிப் FAME திட்டத்தினை மாற்றியமைத்து, தற்போது PM E Drive அறிமுகம் செய்துள்ளது. அதாவது, FAME திட்டத்திற்கு பதிலாக PM E Drive கொண்டுவரப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் PM Electric Drive Revolution Innovative Vehicle Enhancement (PM E-DRIVE) திட்டம் பற்றி கலந்தோசித்து முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், நம்மில் பலருக்கும் இத்திட்டம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அதனை தெரிந்துக்கொள்ளும் விதமாக இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.
PM E Drive திட்டம் என்றால் என்ன.?
PM E Drive திட்டம் என்பது, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட திட்டம் ஆகும். இத்திட்டம் FAME திட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட திட்டம் ஆகும். இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க, மத்திய அரசு ஆனது PM E Drive என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
FAME திட்டம் ஆனது, 2015 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. தற்போது, இத்திட்டம் மார்ச் 2024 ஆம் ஆண்டில் முடிவுக்கு கொண்டுருவரப்பட்டு, அதற்கு பதிலாக PM E Drive Scheme திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திரரை மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் PM E-Drive திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து முடிவு எடுக்கப்பட்டது என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள் கூறியுள்ளார்.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியை/விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு 10,900 கோடி செலவில் இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டம் ஆனது, 24.79 லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்கள், 3.16 லட்சம் இ-மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 14,028 இ-பஸ்ககளுக்கு மானியம் வழங்கும் வகையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த PM E Drive Scheme ஆனது, 88,500 சார்ஜிங் மையங்களையும் ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் நாம் வாங்கும் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000/- வரை மானியமும், நாம் வாங்கும் மின்சார மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.50,000/- வரை மானியமும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், அடுத்த 10 வருடத்திற்குள் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கக்கூடிய வாகனங்கள் இருக்கக்கூடாது என்பதே ஆகும். ஐ நா சபைக்கு இந்தியா 2050 ஆம் ஆண்டிற்குள் NET 0% CARBON EMISSION என்ற இலக்கை அடைய வேண்டும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளது. எனவே, இந்த இலக்கை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில், அதன் பாதையை நோக்கி மத்திய அரசு சென்று கொண்டிருக்கிறது.
பெண்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் அரசின் அசத்தலான திட்டம்
இத்திட்டம் ஆனது, மின்சார இருசக்கர வாகனங்கள், மின்சார மூன்று சக்கர வாகனங்கள், இ-ஆம்புலன்ஸ்கள், இ-டிரக்குகள் மற்றும் மின்சார வாகனங்களை (EVs) ஊக்குவிக்கும் வகையில் ரூ.3,679 கோடி மதிப்பில் மானியங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும், 14,028 இ-பஸ்களை கொள்முதல் செய்ய ரூ.4,391 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இ-ஆம்புலன்ஸ் சேவைக்காக 500 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இ-டிரக்குகளை ஊக்குவிக்கவும் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |