இளைஞர்களுக்கான பிரதமர் மோடியின் புதிய Internship திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Advertisement

PM Internship Scheme Details In Tamil | PM Internship திட்டம்

இளைஞர்களே கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை இல்லாமல் திண்டாடுகிறீர்களா கவலை வேண்டாம் பிரதமர் மோடி அவர்கள் புதிய Internship திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தில் உங்களுக்கு தேவையான கம்பனியில் பதிவு செய்து ஓராண்டு பயிற்சி மற்றும் அதற்கான சம்பளத்தை பெறலாம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு இந்தியாவில் உள்ள ஒரு கோடி இளஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். PM Internship திட்டத்தை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

PM Internship திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23 அன்று தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார் மேலும் இந்த PM Internship திட்டம் அக்டோபர் 3 அன்று தொடங்கப்பட்டது.இந்த திட்டத்தின் நோக்கம் வணிகத்தில் இளைஞர்களுக்கான முன் அனுபவத்தை பெற உதவுகிறது. கல்வி கற்றல் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கிறது.

Rs.436 செலுத்தினால் Rs.2,00,000/- பெறலாம் மத்திய அரசு திட்டம்..!

திட்டத்தின் நன்மைகள்:

  •  2024-2025 ஆண்டில் 1.25 லட்சம் இளைஞர்களுக்கு இந்த பயிற்சி காலம் மூலமாக வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
  • Internship காலம் 12 மாதம் ஆகும் இதில் இளைஞர்களுக்கு பணி அனுபவம் கிடைக்கும்.
  • இந்த திட்டத்தை கல்லூரி முடித்த மாணவ மாணவிகளுக்கு உதவியாக இருக்கும்.
  • விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

  • இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள் 21 வயது முதல் 24 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

  • இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள் 10th, 12th, ITI, Dilpoma, BA, B.Sc., B.Com, BCA, BBA மற்றும்  B.Pharma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பெண்களுக்கு அதிக வட்டி அளிக்கும் அரசின் அருமையான திட்டம்..! பெண்கள் மிஸ் பண்ணிடாதீங்க..!

சம்பளம் பற்றிய விவரங்கள்:

  • இந்த திட்டத்தில் பயிற்சி பெரும் இளைஞர்களுக்கு மாதம் ரூ . 5,000/- உதவித்தொகையாக வழங்கப்படும்.
  • இதில் ரூ . 500/- நிறுவனம் அதன் CSR நிதி மூலம் பங்களிக்கிறது மேலும் ரூ . 4,500/- அரசாங்கத்தால் பயிற்சியாளரின் வங்கி கணக்குக்கு நேரடி பயன் பரிமாற்ற (DBT) மாதிரியின் கீழ் அனுப்பப்படும்.
  • மேலும் ரூ . 6,000/- ஒரு முறை மானியம் ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் நேரடி பலன் பரிமாற்றம் மூலம் அரசாங்கத்தால் வழங்கப்படும்.

சலுகைகள்:

  • இந்திய அரசின் காப்பீட்டுத் திட்டங்களான பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி, பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாபோன்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை வழங்கப்படும்.
  • மேலும் நிறுவனம் பயிற்சியாளர்களுக்கு விபத்து காப்பீட்டு தொகையையும் வழங்குகிறது.

தேர்வு செயல்முறை:

  • இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள் Shortlisting மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • முதலில் அதிகாரபூர்வ இணையதளமான www.pminternship.mca.gov.in என்ற இணையத்தளம் செல்லவும்.
  • அப்பக்கத்தில் Register Now  –ஐ கிளிக் செய்யவும்.
  • அப்பக்கத்தை பூர்த்தி செய்து Submit செய்யவும்.
  • வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் போர்டல் தானாகவே ஒரு விண்ணப்பத்தை உருவாக்கும்.
  • விண்ணப்பிக்கும் நபர்கள் உங்களுக்கு விருப்பமான 5 Internship வாய்ப்புகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து Submit செய்யவும்.
OFFICIAL WEBSITE  CLICK HERE>>
NOTIFICATION LINK  DOWNLOAD HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement