PM Kisan Pension Scheme Details in Tamil
மத்திய அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சேமிக்கும் வகையில் பல விதமான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அத்திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டம். இத்திட்டம் விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும். அதாவது விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் மாதம் 3000 ரூபாய் வரை பென்ஷன் வாங்கலாம். எனவே இத்திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்யலாம்.? எப்போது பென்ஷன் வாங்கலாம்.? இத்திட்டத்தில் சேர என்ன தகுதி வேண்டும்.? போன்ற விவரங்களை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டம்:
விவசாயிகளின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு, 60 வயதை எட்டியவுடன் மாதந்தோறும் ரூபாய் 3 ஆயிரம் பென்சன் அளிக்கும் வகையில் மத்திய அரசினால் உருவாக்கப்பட்டது தான் பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டம்.
114 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம் பற்றி தெரியுமா.?
முதலீடு தொகை:
இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 55 ரூபாய் முதல் அதிகபட்சம் 200 ரூபாய் வரை மாதம் மாதம் செலுத்தலாம். பிறகு, 60 வயது நிரம்பியவுடம் மாதம் 3000 ரூபாய் வரை பென்ஷனாக பெறலாம்.
தகுதிகள்:
பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டத்தில் 2 ஹக்டேர் நிலமுள்ள அதாவது 5 ஏக்கர் வரை நிலம் வைத்து விவசாயம் பார்க்கும் விவசாயிகளும், 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர தகுதியானவர்கள் ஆவர்.
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- வங்கி பாஸ்புக்
- வருமான சான்றிதழ்
- நிலத்தின் பட்டா
- வயது சான்றிதழ்
5 வருடத்தில் Rs. 10,64,718/- பெறக்கூடிய போஸ்ட் ஆபீஸ் அசத்தலான RD சேமிப்பு திட்டம்..!
பென்ஷன் பெரும் வயது:
இத்திட்டத்தில் மாதம் மாதம் உங்கள் முடிந்த குறிப்பிட்ட அளவு தொகையினை முதலீடு செய்து வருவதன் மூலம் உங்களுக்கு 60 வயது எட்டியவுடன் மாதந்தோறும் 3000 ரூபாய் பென்ஷனாக பெறலாம்.
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |