பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்..! PM Kisan Samman Nidhi in Tamil..!
PM Kisan Samman Nidhi in Tamil:- பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த 2019 பிப்ரவரி, 24ல் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு வருடா வருடம் ரூ.6,000/- நிதி உதவி இத்திட்டத்தில் பெறலாம். அதாவது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இத்திட்டத்தில் ரூ.2000/-வீதம் விவசாயிகள் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும். இத்திட்டம் சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் இப்போது வழங்கப்படுகிறது.
ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்ட நபர்களான அரசு பென்ஷன் பெறுவோர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள், அரசியல்வாதி ஆகியவர்கள் தவிர மற்ற அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
சரி இந்த பதிவில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு 08-வது தவணை 14.05.2021 நாளை முதல் வழங்கப்பட உள்ளது. அதைப்பற்றிய தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 50% அரசு மானியம்..! |
பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் / PM Kisan Samman Nidhi in Tamil:-
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் மத்திய அரசு வழங்கி வருகிறது என்று நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். இந்த தொகையானது ஆண்டுக்கு மூன்று தவணையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. முதல் தவணையில் 3.16 கோடி விவசாயிகள் நிதியுதவி பெற்றனர். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு தவணையிலும் நிதியுதவி பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வந்துள்ளது. 2-வது தவணையில் 6.63 கோடி விவசாயிகளும், 3-வது தவணையில் 8.75 கோடி விவசாயிகளும், 4-வது தவணையில் 8.95 கோடி விவசாயிகளும், 5-வது தவணையில் 10.48 கோடி விவசாயிகளும், 6-வது தவணையில் 10.21 கோடி விவசாயிகளும், 7-வது தவணையில் 10 கோடி விவசாயிகளும் பயன்பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது எட்டாவது தவணைப் பணத்தை வழங்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தில் சுமார் 14 கோடி விவசாயிகளைச் சேர்க்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த வாய்ப்பை தவறவிடாமல் இப்பொழுதே பதிவு செய்யலாம். நீங்கள் இந்த திட்டத்தில் இணைய https://pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவு செய்யலாம்.
தற்பொழுது வழங்கபடும் 8-வது தவணை பணத்தை பெறாவிட்டால் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
தாங்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து உங்களுக்கு எட்டாவது தவணை கிடைக்கவில்லை என்றால், உங்களின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசு PM -Kisan Helpline எண்ணினை அழைத்து புகார் தெரிவிக்கலாம். அதேபோல, மின்னஞ்சல் மூலமாகவும் புகார் செய்யலாம்.
- பிஎம் கிசான் டோல் ஃப்ரீ நம்பர்: 18001155266,
- பிஎம் கிசான் ஹெல்ப் லைன் நம்பர்: 155261,
- பிஎம் கிசான் லேண்ட் லைன் நம்பர்: 011-23381092, 23382401,
- பிஎம் கிசான் புதிய உதவி எண்: 011-24300606,
- பிஎம் கிசான் ஹெல்ப் லைன்: 0120-6025109,
- மின்னஞ்சல் முகவரி: pmkisan-ict@gov.in
PM-Kisan புதிய பட்டியலை எப்படி சரிபார்க்கலாம்?
8-வது தவணைப் பணம் மே 14ஆம் தேதி (நாளை) முதல் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. நாளை ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் நிலையில் அன்றைய நாளில் எட்டாவது தவணைப் பணத்தை வழங்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக சென்ற ஆண்டின் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏழாவது தவணைப் பணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த எட்டாவது தவணைப் பணம் கிட்டத்தட்ட 10 கோடி விவசாயிகளுக்குக் கிடைக்கவுள்ளது. பிஎம்-கிஸான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான pmkisan.gov.in-யில் மத்திய அரசு பயனாளிகளின் முழு பட்டியலையும் அப்லோட் செய்துள்ளது. நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் நன்மையை பெற்றுள்ளீர்களா இல்லையா என்பதை இந்த பட்டியலில் சரிப்பார்த்துக் கொள்ளலாம்.
விவசாயிகளுக்கு பயனுள்ள 6 திட்டங்கள் |
பிஎம்-கிஸான் பயனாளிகள் பட்டியல் எவ்வாறு சரிபார்ப்பது ?
பிஎம்-கிஸான் பட்டியலில் எப்படி உங்கள் பெயரை எவ்வாறு சரிப்பார்க்கலாம் என்பது இங்கே
Step 1
pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்துக்கு செல்லவும்.
Step 2
முகப்பு பக்கத்தில் Farmers Corner என்பதை தேடவும். drop-down மெனுவில் பல தேர்வுகள் இருக்கும் அதிலிருந்து Beneficiary List என்பதை தேர்வு செய்யவும்.
Step 3
அடுத்து நீங்கள் உங்களுடைய மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம் (sub-district), வட்டாரம் மற்றும் கிராமம் ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும்.
Step 4
அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின்னர் Get Report என்பதை சொடுக்கவும்.
Step 5
பிஎம் கிஸான் பட்டியல் திரையில் தோன்றும்.
PM-Kisan பட்டியலை சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும் | PM Kisan Status Check |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |