7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!

Advertisement

 மத்திய அரசு வழங்கும் தெருவோர வியாபாரிக்கான கடனுதவி திட்டம் PM Svanidhi Yojana Scheme..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme: அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் தெருவில் வியாபாரம் செய்யும் வியாபாரிக்கான கடனுதவி திட்டத்தை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.இந்த மத்திய அரசு கடனுதவி திட்டத்தில் வியாபாரிகள் கடனுதவி எவ்வளவு பெறலாம், இந்த திட்டத்தில் யாரெல்லாம் லோனை பெறலாம் என்பதன் பற்றிய விவரங்களை இன்று விரிவாக படித்து தெரிந்துகொள்ளுவோம். தெருவோர வியாபாரிகளின் வீடுகளுக்கு சென்றே கடனுதவியை வழங்குவதற்கு மத்திய அரசானது மொபைலில் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. சரி வாங்க நண்பர்களே இப்போது இந்த திட்டத்தின் முழு விவரங்களையும் படித்து தெரிந்துகொள்ளலாம்..!

newமத்திய அரசின் இளம் தொழில் முனைவோருக்கான கடனுதவித் திட்டம்..!

திட்டம் அமல்படுத்தப்பட்ட தேதி:

ஆத்ம நிர்பார் நிதி(Atmanirbhar Nidhi Scheme) தொகுப்பின் கீழ் நாடு முழுவதும் வியாபாரம் செய்து வரும் தெருவோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி யோஜனா(Svanidhi Yojana Scheme) கடனுதவி வழங்க ஜூலை 1 ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

பிரதமரின் ஸ்வநிதி மொபைல் செயலி(PM Svanidhi Mobile App):

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற துறை அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டது தான் இந்த மொபைல் செயலி திட்டம். ஊரடங்கால் தெருவோர வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரங்களை மீட்பதற்கு கொண்டுவரப்பட்டது இந்த மத்திய அரசு திட்டம்.

அறிமுகம் செய்தவர்:

இந்த கடன் வசதியானது வியாபாரிகளின் வீட்டிற்கே சென்று சேரும் வகையில் பிரதமரின் செயலி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த செயலி திட்டத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற துறை அமைச்சகத்தின் செயலர் துர்கா சங்கர் மிர்ஷா என்பவர் அறிமுகபடுத்தினார்.

மொபைல் செயலியின் நோக்கம்:

இந்த செயலியானது தெருவோர வியாபாரிகள் கடன் விண்ணப்பங்களை பெறுவது, அதற்கான வழங்குமுறைகளை பின்பற்றுவது போன்ற பல பணிகளை உள்ளடக்கிய கள பணியாளர்களுக்கும், கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையில் டிஜிட்டல் மூலமாக மிக சுலபமான முறையில் வியாபாரிகள் பயன்படுத்தக்கூடிய செயலி ஆகும்.

வங்கி நிருபர்கள்:

வங்கி தொடர்பாளர்கள், வங்கி சாரா நிதி நிறுவனம், நுண்கடன் நிதி அமைப்புகள், அதோடு தெரு வியாபாரிகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள் இது போன்ற பல கள பணியாளர்கள் மூலமாக இந்த செயலி திட்டம் அதிக அளவில் மக்களிடம் சேரவேண்டும் என்பதற்காக அனைத்து கள பணியாளர்களுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலமாக இந்த மொபைல் செயலி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடன் பெரும் வசதி:

தெருவோரம் தொழில் நடத்தும் வியாபாரிகள் அனைவரும் இந்த திட்டத்தில்  கடன் பெறுவதற்கு எந்த ஆவணமும் இன்றி கடனை பெறலாம். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக மொபைல் செயலி விளங்குகிறது. இந்த பிரதமரின் செயலி திட்டத்தில் குறைந்த வட்டியில் வியாபாரிகள் கடனை சுலபமாக பெறலாம். ஆன்லைன் மூலம் கடன் வசதியை பெறுவதை விட இந்த மொபைல் செயலி மிகவும் சிறந்து விளங்குகிறது.

newமத்திய அரசு வீடு கட்டும் திட்டம் 2020..! ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி?

செயலியின் சிறப்பம்சம்:

பிரதமரின் ஸ்வநிதி திட்டம் பற்றிய இணையதளத்தில் உள்ள அனைத்து விவரங்களும் பிரதமரின் மொபைல் செயலியிலும் உள்ளன. இந்து செயலினை எங்கே வேண்டுமானாலும் எடுத்துச்செல்லும் வசதியும் இருக்கிறது.

கடன் வழங்கப்பட்ட தேதி:

இந்த திட்டத்தில் எப்போது கடன் வழங்கப்பட்டது என்றால் 2 ஆம் தேதி ஜூலை 2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

கடன் திட்டத்தின் சிறப்பம்சம்:

தெருவோர வியாபாரிகள் அனைவரும் தொழில் கடனாக ரூ. 10,000/- வரை கடனுதவி பெறமுடியும்.

கடன் வாங்கி ஒரு வருடத்தில் மாத தவணை முறையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவேண்டும்.

மானியம்:

வாங்கிய கடன் தொகையை குறிப்பிட்ட காலத்தில் செலுத்திவிட்டாலோ அல்லது காலத்திற்கு முன்னதாகவே செலுத்திவிட்டாலோ வருடத்திற்கு 7% என்ற அடிப்படையில் வட்டியில் மானியம் கொடுக்கப்படும்.

மானிய தொகையானது பயனாளியின் வங்கி கணக்கில் காலாண்டுக்கு ஒருமுறை பயனாளியிடம் நேரடியாக கொடுக்கப்படும்.

கடனை முன்னரே செலுத்தினால் எந்த வித அபராதமும் அளிக்கப்படாது.

டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனை:

டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனையை மேற்கொள்பவர்களுக்கு ஊக்கதொகையாக ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ. 100/- திருப்பி கொடுக்கப்படும்.

அடுத்து உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்துவது, கடன் தேதிக்கு முன்னரே கடனை திருப்பி கொடுப்பது மூலமாக மேலும் அதிகக்கடன் தொகையினை வியாபாரிகள் இந்த திட்டத்தில் பெறமுடியும்.

வியாபாரிகளின் விண்ணப்ப கணக்கு:

இந்த திட்டத்தில் இதுவரை பல்வேறு மாநிலங்களில், யூனியன் பிரதேசங்களில் இருந்து 1,54,000 மேற்பட்ட வியாபாரிகள் தொழில்க்கான கடன் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள்.

அடுத்து 48,000 வியாபாரிகளுக்கு முன்னதாகவே கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு திட்டம் மூலமாக அனைத்து தெருவோர வியாபாரிகளும் பயனடைவார்கள்.

கடன் தொகை பெற இணையதள முகவரி:

PM Street Vendor Atmanirbhar Nidhi (Apply For Loan)

 

newஅனைவருக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்..! மாதம் 500 முதலீடு செய்தால் 11,39,663 கிடைக்கும்..!

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement