PM SYM Pension Scheme in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே மிகவும் முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அதாவது பணம் இல்லாதவர்கள் இன்றைய சூழலில் மனிதர்களாக கூட மதிக்காது இந்த சமுதாயம். அதனால் அனைவருமே தங்களது தற்போதைய வாழ்க்கைக்காக சம்பாதிப்பதுடன் தங்களது எதிர்கால வாழ்க்கைக்காகவும் சேர்த்து சம்பாதிக்கின்றார்கள். அப்படி மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்தும் நமக்கு தேவைப்படும் நேரத்தில் நம்மிடம் அந்த பணம் இருக்காது. அதனால் தான் அனைவருமே தங்களது எதிர்க்காலத்திற்காக சேமிக்க வேண்டும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டத்தை பற்றி கூறி கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் PM SYM Pension திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
PM SYM Pension Scheme Details in Tamil:
இந்த PM SYM Pension திட்டமானது இந்தியாவில் உள்ள அமைப்புசாரா வேலைத் துறை மற்றும் வயதானவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுவரப்பட்டது.
அதாவது இந்தத் திட்டத்தின் நோக்கம் பயனாளிக்கு ரூபாய் 60 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 பெற வேண்டும் என்பது தான்.
மாதம் 10,000 ரூபாய் வரை ஓய்வூதியம் அளிக்கும் அருமையான திட்டம்
தகுதி:
இந்த திட்டத்தில் அமைப்புசாரா வேலை செய்யும் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 40 வயதிற்கு உட்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் சேரலாம்.
மேலும் உங்களின் மாத வருமானம் ஆனது ரூபாய் 15,000 இருக்க வேண்டும்.
சேமிப்பு தொகை:
இந்த திட்டத்தில் நீங்கள் சேமிக்க வேண்டிய தொகையானது உங்களின் வயதினை பொறுத்து மாறுபடும். அதற்கான அட்டவணை ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
FD திட்டத்தில் 2,00,000 செலுத்தினால் SBI வங்கியில் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கிடைக்கும் தெரியுமா
நன்மைகள்:
இந்த திட்டத்தில் நீங்கள் செலுத்தும் தொகையின் சமஅளவை அரசு செலுத்தும். அதேபோல் இந்த திட்டத்தில் நீங்கள் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்தலாம்.
உதாரணத்திற்கு நீங்கள் இந்த PM SYM Pension திட்டத்தில் 18 வயதில் இணைகிறீர்கள் என்றால் நீங்கள் மாதம் 55 ரூபாய்யை உங்களின் 60 வயது வரை செலுத்த வேண்டும்.
இதே 55 ரூபாயை உங்களின் கணக்கில் அரசும் செலுத்தும். அதாவது மொத்தமாக 110 ரூபாய் ஆகும். 60 வயதிற்கு பிறகு உங்களுக்கு மாதம் 3,000 ரூபாய் பென்ஷனாக அளிக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டீர்கள் என்றால் உங்களின் கணவன் அல்லது மனைவிக்கு மாதம் 1,500 ரூபாய் பென்ஷனாக அளிக்கப்படும்.
தபால் துறையில் மாதம் 500 ரூபாய் செலுத்தினால் 30,00,000 ரூபாய் வரை கிடைக்கும் சூப்பரான திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |