வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மத்திய அரசின் தொழில் செய்வோருக்காக 15,000 ரூபாய் வழங்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டம்..!

Updated On: September 23, 2023 6:27 AM
Follow Us:
pm vishwakarma scheme 2023 in tamil
---Advertisement---
Advertisement

PM Vishwakarma Yojana 2023 in Tamil

சொந்தமாக தொழில் செய்வது என்பது நம்முடைய வாழ்க்கைக்கு நிலையான ஒரு வருமானத்தை தரக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக உள்ளது. இவ்வாறு நாம் தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு பணம் மற்றும் தக்க பயிற்சி என்பது வேண்டும். இத்தகைய இரண்டும் எல்லாரிடமும் இருக்கா என்று கேட்டால்..? அது தான் கிடையாது. அதனால் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு ஆனது விஸ்வகர்மா யோஜனா திட்டம் என்ற ஒன்றை அறிமுகம் செய்து உள்ளது. ஆகையால் அத்தகைய திட்டம் பற்றியும், அதில் எத்தகைய தொழில் செய்வோர் எல்லாம் பயன்பெறலாம் என்பது பற்றியும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

விஸ்வகர்மா யோஜனா திட்டம்:

விஸ்வகர்மா யோஜனா திட்டம் ஆனது பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் துவங்கப்பட்ட திட்டம் ஆகும். இத்தகைய திட்டம் ஆனது இந்தியாவில் உள்ள கைவினை கலைஞர்களுக்கான ஒரு திட்டமாக அறிவிக்கப்ட்டுள்ளது.

 விஸ்வகர்மா யோஜனா திட்டம்

ஆகையால் இந்த திட்டத்தின் வாயிலாக கைவினை கலைஞர்களுக்கான பயிற்சி, நிதி உதவி என அனைத்தும் வழங்கப்படும். மேலும் இவர்கள் செய்யும் கைவினை பொருட்கள் இந்தியா மட்டும் இல்லாமல் பிற நாடுகளிலும் விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே கைவினை கலைஞர்களுக்கான இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கான மொத்தம் 13 கோடி செலவில் நிதியமைக்கப்ட்டுள்ளது என்பது குறிப்பிடதக்க ஒன்றாக உள்ளது.

யாரெல்லாம் பயன் அடையலாம்:

  1. படகு தயாரிப்பாளர்
  2. குயவர்
  3. நெசவாளர்
  4. பூ கட்டுபவர்
  5. கூடை பின்புபவர்
  6. பொற்கொல்லர்
  7. தையல்காரர்
  8. மீன்பிடி வலை தயாரிப்பாளர்
  9. துடைப்பம், பாய் தயாரிப்பவர்
  10. பூட்டு தயாரிப்பவர்
  11. செருப்பு தைப்பவர்
  12. ஆயுதம் தயாரிப்பவர்
  13. முடி வெட்டுபவர்
  14. பொம்மை செய்பவர்
  15. சிற்பி
  16. மேஸ்திரி
  17. சலவை தொழிலார்
  18. கல் சிற்பி

மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து கைவினை பொருட்கள் செய்பவர்களுக்கு மானியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தில் நீங்கள் ஆன்லைன் மூலம் இலவசமாக விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் இதை பயிற்சி அளிக்கப்படும் நபர்களுக்கு ID கார்டு மற்றும் விஸ்வகர்மா யோஜனா சான்றிதழ் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

  1. ஆதார் கார்டு
  2. தொலைபேசி எண்
  3. குடும்ப அட்டை
  4. வங்கி கணக்கு தகவல்

மேலும் இதில் விண்ணப்பிக்க உள்ளவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.

பயிற்சி அளிக்கும் முறை:

 pm vishwakarma yojana 2023 in tamil

கைவினை செய்பவர்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் போது அவர்களுக்கு 500 ரூபாய் வழங்கப்படும். மேலும் 1500 ரூபாய் மதிப்பிலான டூல்கிட் வவுச்சரும் அளிக்கப்படும் என்பது குடிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.

நிதி உதவி எவ்வளவு..?

இத்தகைய திட்டத்தில் 15,000 ரூபாய் கருவித்தொகுப்பு ஊக்கத் தொகையாகவும் அளிக்கப்படுகிறது.

லோன் வசதி:

மேலும் 5% சலுகை வட்டி விகிதத்தின் அடிப்படையில் முதல் தவணையாக 1 லட்சம் ரூபாயும், 2-வது தவணையாக 2 லட்சம் ரூபாயினையும் D கார்டு மற்றும் விஸ்வகர்மா யோஜனா சான்றிதழை வைத்து இணை இல்லாத கடன் தொகையாக நீங்கள் குறிப்பிட்ட வங்கியில் கடன் பெற்றுக்கொள்ளலாம்.

18 வயது வரைக்கும் உள்ள குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4000 ரூபாய் வழங்கும் திட்டம் பற்றி தெரியுமா 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now