விஸ்வகர்மா யோஜனா
நம் நாடானது, அதன் கலாசார பன்முகத்தன்மை மற்றும் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், மாறுபட்ட, சிறப்பு மிக்க கலை, கைவினை பொருட்களின் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. இருப்பினும், கைவினை கலைஞர்களின் இந்த பாரம்பரிய திறமைகள், முறையான அங்கீகாரமின்மை, குறைந்த அளவிலான வருமானம், நவீன முறையில் தயாராகும் பொருட்களால் உருவாகியுள்ள போட்டி, போதிய சந்தை வாய்ப்புகள் இல்லாமை, போதிய பயிற்சி இல்லாதது மற்றும் உள்கட்டமைப்பு பிரச்னைகள் என, பலவிதமான சவால்களை சந்திக்கின்றன. இவற்றில் இருந்து நமது கைவினை கலைஞர்களின் விடுபட இந்திய அரசு விஸ்வகர்மா யோஜனா என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் நாட்டின் பொருளாதார நிலை உயரும். அத்தகைய சிறப்புமிக்க திட்டமான விஸ்வகர்மா யோஜனா திட்டத்தினை பற்றி எந்த பதிவில் முழுமையாக தெரிந்துகொள்வோம் வாருங்கள்…
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
விஸ்வகர்மா யோஜனா திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள்:
vishwakarma scheme in tamil:
பிரதமர் மோடியின் தனது சுதந்திர தின உரையில் விஸ்வகர்மா யோஜனா என்னும் திட்டத்தை அறிமுகபடுத்தினர்.
இந்த திட்டம் பாரம்பரிய கைவினைஞர்களுக்கு நிதி உதவி மற்றும் அவர்களின் திறன்மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும் கொண்டுவப்பட்டுள்ளது.
பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு:
பாரம்பரிய கைவினைஞர்களுக்கு 6 நாள் விரிவான பயிற்சி திட்டத்தினை வழங்குகிறது.
தச்சர்கள், தையல்காரர்கள், கூடை நெசவாளர்கள், முடி திருத்துபவர்கள், பொற்கொல்லர்கள், கொல்லர்கள், குயவர்கள், மிட்டாய்கள் செய்பவர்கள், செருப்புத் தொழிலாளிகள் போன்ற பல கைவினைஞர்களுக்கு இந்த பயிற்சி அவர்கள் துறையில் திறம்பட செயல்பட உதவும்.
நிதி உதவி:
pm vishwakarma திட்டம் பயிற்சிக்கு அப்பாற்பட்டு ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரையிலான கணிசமான நிதி உதவியினை பாரம்பரிய கைவினைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
வேலை வாய்ப்புகள்:
பிரதமர் விஸ்வகர்மா திட்டம் ஆண்டுதோறும் சுமார் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சி மேம்படுத்தும் என நம்பப்படுகிறது.
ஆன்லைன் விண்ணப்ப முறை:
ஆர்வமுள்ள நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதன் மூலம் திட்டத்தை எளிதாக அணுகலாம். இதற்கான ஒன்லைன் விண்ணப்பம் 2023, செப்டம்பர் 17 அன்று முதல் ஆரம்பமாகும்.
கைவினைஞர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டையுடன் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான 5% தள்ளுபடி வட்டியில் கடன் உதவி வழங்கப்படுகிறது.
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |