ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.200000/- வரை புதிய திட்டம் அறிமுகம்

Advertisement

PM Vishwakarma Yojana 2023 Tamil

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. அதாவது ஆதார் அட்டை வைத்திருந்தால் இரண்டு லட்சம் ரூபாய் வரை பெறக்கூடிய ஒரு அரசு திட்டத்தை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த திட்டத்திற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தேவைப்படும் ஆவணக்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம், முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள பதிவை முழுமையாக படியுங்கள்.

விஸ்வர்கமா திட்டம்:

இந்த திட்டத்திற்கு ஆதார் கார்ட் வைத்திருக்க அனைவருமே விண்ணப்பிக்கலாம், இத்திட்டத்தின் பெயர் பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா ஸ்கீம் ஆகும். இந்த திட்டத்தை மத்திய அரசு ஆரம்பித்துள்ளது. விஸ்வகர்மா யோஜனா திட்டம் எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தபால் துறையில் பிக்ஸடு டெபாசிட் திட்டத்தில் 20000 ரூபாய் சேமித்தால் 1 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்..!

திட்டத்தின் நோக்கம்:

நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதும் அவர்களது கைவினைத்திறனை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். கிராமப்புறங்களில் உள்ள கைவினை கலைஞர்கள் பிரதான மாதிரி விஸ்வகர்மா யோஜனா திட்டம் பலன்களை பெறலாம்.

இந்த திட்டம் நாடு முவதும் உள்ள கைவினைக் கலைஞர்களை திறன்களை மேம்படுத்தும் எனவும், அவர்களால் உருவாக்கப்பட்ட பொருட்கள் உலகம் முழுவதும் புதிய அடையாளத்தை பெறும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிம் கிசான் திட்டத்தை போலவே விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் பலனை பெற, முதலில் பதிவு செய்து பின்னர் சரிபார்த்தல் வேண்டும். அதன் பிறகு இந்த திட்டத்தின் தகுதியான பயனாளிகளுக்கு PM விஸ்வகர்மா யோஜனா சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் PM விஸ்வகர்மா யோஜனா அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான மந்திரி விஸ்வகர்மா நிதி திட்டம்:

நிதி அமைச்சர் ஸ்ரீமதி. நிறுமல சீதாராமன் அவர்கள் 2023-2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது இந்த திட்டத்தை நாட்டுமக்களுக்கு தெரிவித்தார். ஆகஸ்ட் 16, 2023 அன்று, PM விஸ்வகர்மா யோஜனா அல்லது PM விஸ்வகர்மா கவுஷல் சம்மன் யோஜனவை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அதன் பிறகு செப்டம்பர் 17, 2023 அன்று அதாவது விஸ்வகர்மா ஜெயந்தி அன்று பிரதமர் விஸ்வகர்மா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த பிரதம மந்திரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளும் உள்ளது. அதாவது விண்ணப்பதாரர் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் கைவினைஞர் அல்லது கைவிஞராக இருக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அஞ்சல்துறையின் டைம் டெபாசிட் திட்டத்தினை பற்றிய தகவல்கள்

யாரெல்லாம் தகுதியானவர்கள்?

  1. மீன்பிடி வலை தயாரிப்பாளர்
  2. தையல்காரர்
  3. சலவை தொழிலாளர்
  4. முடி திருத்துபவர்
  5. பொம்மை தயாரிப்பாளர்
  6. பாரம்பரியம் (கூடை/ பாய்/ துடைப்பம் தயாரிப்பாளர்)
  7. நெசவாளர்
  8. கட்டுமான தொழிலார்
  9. காலணி கைவினைகர்
  10. சிற்பி
  11. கல் உடைபவர்கள்
  12. குயவன்
  13. பொற்கொல்லர்
  14. பூட்டு தொழிலாளி
  15. சுத்தியல் மற்றும் கருவி கிட் மேக்கர்
  16. கொல்லன்
  17. கவசம் அணிபவர்
  18. படகு தயாரிப்பாளர்
  19. தச்சர்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அரசு வழங்கும் 7,50,000/- தாட்கோ கடனுதவி பெறுவது எப்படி..!

PM விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள் என்ன?

  • ஆதார் அட்டை
  • வாக்காளர் அடையாள அட்டை
  • கைபேசி எண்
  • தொழில் சான்று
  • வங்கி கணக்கு விவரங்கள்
  • வருமான சான்றிதழ்
  • சாதிச் சான்றுதல்

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் தேவைப்படும்.

எவ்வளவு கடன் கிடைக்கும்:

முதல் கட்டத்தில் ரூபாய் 1 லட்சம் வரை 5 சதவினம் வட்டியுடன் கடன் வழங்கப்படுகிறது.

இரண்டாவது கட்டத்தில் 2 லட்சம் வரை 5 சதவீதத்திற்கு வட்டியுடன் கடன் வழங்கபடுகிறது.

பயிற்சி:

இந்த திட்டத்தில் திறன் பயிற்சியும் வழங்கபடுகிறது, குறிப்பாக இந்த பயிற்சி 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த பயிற்சி காலகட்டத்தின்  போது உதவி தொகை ஒரு நாளுக்கு 500 ரூபாய் வழங்கப்படும். அதாவது இந்த பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு ஒரு நாளுக்கு 500 ரூபாய் வழங்கப்படும்.

நாம் பயிற்சிகளை முழுமையாக முடித்துவிட்டோம் என்றால் பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும்.

நாம் ஏதாவது தொழில் தொடங்க கருவிகள் வாங்கும் பட்சத்தில், இந்த திட்டத்தில் அதற்கும் 15,000/- ரூபாய் வரை அட்வான்ஸ் வழங்குகிறார்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement