ரூ.25 லட்சம் கடனுதவி வழங்கும் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம்..!

Advertisement

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டம்..! how To Apply PMEGP Loan Online..!

Apply PMEGP Loan Online: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பிரதமரின் ரூ.25 லட்சம் கடனுதவி வழங்கும் வேலைவாய்ப்பு திட்டத்தின் பதிவை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். இந்த திட்டத்தின் மூலம் யாரெல்லாம் கடனுதவி பெறலாம், கடனுதவி பெறுவதற்கு தேவையான ஆவணங்கள், இந்த திட்டத்தில் எப்படி அப்ளை செய்வது என்ற விவரங்கள் சிலருக்கு இன்றும் தெரியாமல் இருக்கிறது. சரி வாங்க நண்பர்களே இப்போது இந்த திட்டத்தை பற்றி விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!

newமாதம் 5,000/- ரூபாய் வருமானம் தரக்கூடிய அரசு திட்டம்..! Atal pension Yojana scheme Tamil..!

Apply PMEGP Loan Onlineபாரத பிரதமர் வேலைவாய்ப்பு திட்டம் / Prime Minister Employment Generation Programme Scheme:

தொழில் துவங்குவதற்கு அதற்கேற்ற முதலீடு இல்லாதவர்கள் பலர் இருப்பார்கள். இதனால் அரசாங்கம் மூலம் கடனுதவி பெறுவதற்காக கொண்டுவரப்பட்டது தான் இந்த வேலைவாய்ப்பு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு ரூ.25/- லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது.

அதோடு 35% மானியத்துடன் தொழில் துவங்குபவர்களுக்கு கடன் உதவி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் செக்டர் பிரிவுகளாக கடன் வழங்கப்படுகிறது.

1. Service Sector
2. Manufacturing Sector  

 

Service Sector:

சர்வீஸ் செக்டர் பிரிவுக்கு 10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த பிரிவில் எந்த ஒரு பொருளும் உற்பத்தி செய்யாமல் தொழில் செய்பவர்களுக்கு இந்த கடனுதவி கொடுக்கிறார்கள்.

Manufacturing Sector:

ஒரு பொருளை உற்பத்தி செய்து தொழில் செய்பவர்களுக்கு 25 லட்சம் வரை கடனுதவி கொடுக்கிறார்கள்.

தகுதிகள்:

  • கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பதாரரின் வயது 18 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
  • இந்த கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் கிராம புறத்தினை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். நகர்ப்புற விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • புதிதாக தொழில் தொடங்குவது போன்று இருத்தல் வேண்டும். அதே ஊரில் செய்த தொழிலை செய்ய கூடாது.
  • கல்வி தகுதிகள் எதுவும் இல்லை.
  • விண்ணப்பதாரர்கள் 10 லட்சத்திற்கு மேல் Manufacturing தொழில் தொடங்க உள்ளவர்கள், 5 லட்சத்திற்கு மேல் Service sector தொழில் தொடங்க உள்ளவர்கள் கண்டிப்பாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எந்த தொழிலுக்கு கடனுதவி கிடைக்காது:

  • வெற்றிலை, பாக்கு, புகையிலை தயாரித்தல் தொழில்.
  • இயந்திர உபகரணம்(machinery equipment) இல்லாமல் தொழில் செய்பவர்களுக்கு இந்த கடனுதவி கிடைக்காது.
  • வாகனம் வாங்கி தொழில் தொடங்க உள்ளவர்களுக்கு இந்த திட்டத்தில் லோன் கிடைக்காது.
  • ஆன்லைன் மூலம் இந்த திட்டத்தில் லோன் பெற்று தொழில் செய்பவர்களுக்கு கடனுதவி பெற முடியாது.
  • பட்டு நூல் உற்பத்தி செய்பவர்கள், மலர் வணிகம், காய்கறிகள், தோட்ட வேளாண்மை தொழில் செய்பவர்களுக்கு இந்த பிரதமர் திட்டத்தில் கடனுதவி பெற இயலாது.

மானிய தொகை:

  • கிராம புறத்தில் இருந்து General பிரிவில் உள்ளவர்களுக்கு நீங்கள் வாங்கும் மொத்த தொகையில் இருந்து 25% மானியம் வழங்கப்படும்.
  • நகர்புறத்தில் வசித்து General பிரிவில் உள்ளவர்களுக்கு நீங்கள் வாங்கும் மொத்த தொகையில் இருந்து 15% மானியம் வழங்கப்படும்.
  • நகர் புறத்தில் இருந்து Special பிரிவில்(SC/ST/OBC/minorities/women/ex-servicemen/physically handicapped/NER) உள்ளவர்களுக்கு மொத்த தொகையில் இருந்து 25% மானியம் வழங்கப்படும்.
  • கிராம புறத்தில் Special பிரிவில் உங்களுடைய  மனைவியின் பெயரிலோ, தங்கை, அக்கா பெயரிலோ லோனை அப்ளை செய்தால் 35% மானியம் கிடைக்கும்.

பங்கீடு:

  • General பிரிவில் அனைத்து ஆண்மகன்களும் வருவார்கள். இந்த பிரிவில் 10 லட்சத்திற்கு தொழில் தொடங்க இருப்பவர்கள் நீங்கள் இந்த தொழிலில் 10% முதலீடு போட்டு ஆரம்பிக்க வேண்டும்.
  • உதாரணத்திற்கு 10 லட்சத்திற்கு 1 லட்சம் நீங்கள் முதலீடு போடுமாறு இருக்கும். இதனை வைத்து உங்களுக்கு 9 லட்சம் லோன் கிடைக்கும்.
  • Special பிரிவில் 10 லட்சத்திற்கு தொழில் தொடங்க இருப்பவர்கள் நீங்கள் இந்த தொழிலில் 5% முதலீடு போட்டு ஆரம்பிக்க வேண்டும்.
  • உதாரணத்திற்கு 10 லட்சத்திற்கு ரூ.50,000/- நீங்கள் முதலீடு போடுமாறு இருக்கும். இதனை வைத்து உங்களுக்கு 9 லட்சத்து 50,000/- ஆயிரம் அரசின் பங்கீடு கிடைக்கும்.

எப்படி விண்ணப்பிப்பது:

இந்த திட்டத்தில் ஆன்லைன்(Online) அல்லது அஞ்சல்(Offline) முறையிலும் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய இணையதள முகவரி:

“PMEGP” என்ற வலைதளத்தில் சென்று உங்களுடைய விண்ணப்பங்களை வைத்து ஆன்லைனில் அப்லோட் செய்யலாம்.

அஞ்சல் மூலம் எப்படி விண்ணப்பிப்பது:

KVIC(khadi village industries commission) என்ற அலுவலகத்தில் உங்களுடைய மாவட்டத்தில் எங்கு உள்ளதோ சென்று ஆதார், பான், ப்ராஜக்ட் ரிப்போர்ட், Population Certificate இணைத்து கொடுக்க வேண்டும். இந்த சான்றிதழ் அனைத்தும் ஆன்லைன் மற்றும் அஞ்சல் மூலம் இரண்டிற்கும் பொருந்தும்.

Project Report என்பது நீங்கள் செய்ய போகும் தொழிலின் விவரம், இயந்திர உபகரணத்தின் விலை, மிஷின் மூலம் உற்பத்தி செய்யும் விவரம், மூல பொருட்கள் வாங்க போகும் விவரம், மாத வருமானம் விவரம், இதன் மூலம் 6 மாதத்திற்கான வருமானம் விவரம், வருடத்திற்கான வருமானம் விவரங்களை குறிப்பது தான் ப்ராஜக்ட் ரிப்போர்ட்.

Population Certificate என்பது நீங்கள் வசிக்கும் இடத்தில் மக்கள் தொகை கணக்கீடு. உங்களுடைய ஊரில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலகத்தில் சென்று இந்த சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் முக்கியமான ஒன்று உங்களுடைய Project Report-ஐ வைத்து தான் கடனுதவி கிடைக்குமா கிடைக்காத என்று அதிகாரிகள் ஆலோசிப்பார்கள்.

newசவரன் தங்க பத்திர முதலீடு திட்டம்..! Sovereign Gold Bonds Scheme..!

Project Report சான்று:

Project Report-ன் புரிதல் மிகவும் அவசியம். Project Report பற்றி தெரிந்துகொள்ளுபவர்கள் KVIC அலுவலகம் அல்லது மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தில் இதன் சான்றுகள் இருக்கும்.

sample Project Report: Click here 

 

இதனை வைத்து உதாரணத்திற்கு தெரிந்துக்கொள்ளலாம். இந்த சான்றினை வைத்து உங்களுடைய தொழிலுக்கு ஏற்றவாறு ரிப்போர்ட் ரெடி செய்ய வேண்டும். ஒருவரிடம் தொகை கொடுத்து ரிப்போர்ட் ரெடி செய்து கொடுத்தாலும் நமக்கு லோன் கிடைக்காது. ஏனென்றால் ரிப்போர்ட்டில் நீங்கள் கூறியுள்ள விஷயம் உங்களுக்கு புரிந்திருத்தல் அவசியம்.

லோன் வழங்கும்போது இதன் பற்றிய கேள்விகள் உங்களிடம் கேட்கப்படும். ப்ராஜெக்ட் ரிப்போர்ட் தயார் செய்பவர்களின் அருகில் கண்டிப்பாக லோன் பெறுபவர்கள் இருக்க வேண்டும். இதன் மூலமே கடனுதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

லோன் பெறுவதற்கு:

இந்த லோன் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதை தவிர்த்துக்கொள்வது நல்லது. KVIC அலுவலகம் சென்று உங்களுடைய விண்ணப்பங்களை ஒப்படைத்த பிறகு அலுவலகர்கள் கேள்விகள் சில கேட்பார்கள்.

கேள்வியில் இதற்கு முன் செய்த தொழில், தொழில் துவங்க எவ்வளவு தொகை, என்ன தொழில் செய்ய போகிறீர்கள் என்று கேள்விகள் கேட்பார்கள். சரியாக ரிப்போர்ட்டில் உள்ள பதிலை கூறிய பிறகு அலுவலகர் கையெழுத்திட்ட பிறகு அருகில் உள்ள வங்கிக்கு உங்கள் விண்ணப்பம் அனுப்பி வைக்கப்படும்.

அடுத்ததாக எந்த வங்கியில் லோன் வேண்டும் என்று கேட்பார்கள். நீங்கள் கூறும் வங்கிக்கு உங்கள் ஆவணங்கள் அனுப்பப்படும். வங்கி அதிகாரிகள் உங்களை அழைத்து எந்த இடத்தில் தொழில் துவங்க போகிறீர்கள் என்று கேட்பார்கள். பதிலை அளித்த பிறகு ஆய்வாளர்கள் நேரில் காணுவதற்கு வருவார்கள்.

ஆய்வாளர்கள் இடத்தின் பேப்பர், அல்லது சொந்தமான இடம் என்றால் அதன் ஆவணம், வாடகைக்கு தொழில் துவங்க உள்ளவர்கள் என்றால் அதன் ஆவணம், இயந்திர விவரம், Pollution Certificate கிராம நிர்வாக அலுவலகரிடம் வாங்கி ஒப்படைக்க வேண்டும்.  அனைத்தும் சரி பார்த்து அலுவலகர்கள் கையெழுத்திட்டு KVI அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனுப்பிவைப்பார்கள்.

kvi நிறுவனம் மீண்டும் விண்ணப்பதாரர்களை அழைத்து உங்களுடைய ஆவணம் வங்கியில் ஒப்புதல் அளித்து உள்ளார்கள். உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறுவார்கள். பயிற்சி முடிந்த பிறகு கேள்விகள் கேட்டு ஒப்புதல் செய்த பின் மீண்டும் வங்கிக்கு உங்களுடைய ஆவணம் அனுப்பிவைக்கப்படும்.

லோன் வழங்கும் முறை:

வங்கியியல் ஆவணம் சென்ற பிறகு அவர்கள் சரிபார்த்த பின் அவர்கள் விண்ணப்பதாரர்களை அழைத்து விடுவார்கள். வங்கி அதிகாரி லோன் தொகை, எது மாதிரியான லோன் வாங்க போகிறீர்கள் என்று விசாரணை நடத்துவார்கள்.

லோனை இரண்டு வகையாக கொடுப்பார்கள். முதலில் Term Loan-ஆக மற்றும் Working Capital-ற்கு லோன் தொகை வழங்கப்படும்.

Term Loan என்பது நீங்கள் வாங்க போகும் இயந்திரம் பெயரில் லோன் கொடுக்கப்படும். Working Capital என்பது செய்ய போகும் தொழில், அதன் மூல பொருட்கள் மூலம் லோன் வழங்கப்படும். ஆவணங்கள் அனைத்தும் சரிபார்த்த பிறகு நீங்கள் கேட்கும் தொகை வங்கி கணக்கிற்கு வழங்கப்படும்.

இந்த திட்டத்திம் பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள உங்கள் ஊர் மாவட்ட தொழில் மையத்திலோ அல்லது kvi அலுவலகத்தில் சென்றோ விவரங்களை கேட்டு அறியலாம்.

newவிவசாய தங்க நகை கடன் திட்டம்..! Gold Loan Scheme For Farmers In SBI..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement