Pmsby Scheme Details in Tamil
அனைவருக்கும் வணக்கம்..! பணத்தை சம்பாதிப்பதை விட சேமிப்பது ரொம்ப முக்கியமானது. பலருக்கும் பணத்தை சேமிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் எதில் சேமிப்பது என்ற சந்தேகம் உள்ளது. எந்த திட்டத்தில் சேமித்தால் நல்ல லாபம் கிடைக்கும், எதில் வருமானம் அதிகமாக கிடைக்கும் என்று திட்டமிட்டு ஆராய்ந்து வாங்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் பல வகையான திட்டங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Pmsby Scheme Details in Tamil பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறவும்.
Pmsby Scheme Details in Tamil:

இந்திய அரசாங்கம் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவை மூன்று சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. அதாவது,
ஏழை எளிய மக்கள் அனைவரும் குறைந்த பிரீமியத்தில் விபத்து காப்பீடை பெற வேண்டும் என்பதற்காக 2015-ம் ஆண்டு கொண்டு வந்த திட்டம் தான் PRADHAN MANTRI SURAKSHA BIMA YOJANA திட்டம். இந்த திட்டம் (PMSBY) ஒரு வருடத்திற்குள் தற்செயலான மரணம் மற்றும் இயலாமை பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க முடியும்.
இந்த திட்டத்தில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால் ஒவ்வொரு வருடமும் 12 ரூபாய் ஆட்டோ டெபிட் செய்யப்படும். கூடவே 2 லட்சம் இன்சூரன்ஸ் கவரை வழங்குவார்கள். தற்போது 20 ரூபாய் ஆட்டோ டெபிட் செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தில் மூன்று விதமான கவரேஜ்களை வழங்குகிறது.
- Accidental Death
- Total Disability
- Partial Disablity
- ஒரு நபர் விபத்தினால் இறந்தால் 2 லட்சம் இன்சூரன்ஸ் வழங்குகிறார்கள்.
- விபத்து ஏற்பட்டு கை கால்கள் செயலிழந்து இருந்தால் 2 லட்சம் காப்பீடு வழங்குகிறார்கள்.
- விபத்து மூலம் ஒரு கண், ஒரு கை, ஒரு கால் செயலிழந்து இருந்தால் 1 லட்சம் இன்சூரன்ஸ் வழங்குகிறார்கள்.
வயது தகுதி:
- இந்த திட்டத்தில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 18-ம் அதிகபட்சம் 70 வயது வரைக்கும் உள்ளவர்கள் பயன் அடையலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா
முதிர்வு காலம்:
- இந்த திட்டத்தில் முதிர்வு தொகையாக ஏதும் கிடைக்காது.
எப்படி அப்ளை செய்வது:
- இந்த திட்டத்தை நீங்கள் தபால் துறை மற்றும் வங்கிகளில் பயன் அடையலாம்.
- மேலும் வங்கி அல்லது தபால் துறையில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
பிரீமியம் தொகை:
இந்த திட்டத்தில் தற்போது 20 ரூபாய் பிரீமியம், ஆனால் வருடத்திற்கு ஒரு முறை பிரீமியம் தொகையை மாற்றுவார்கள்.
SBI வங்கியில் Rs. 2,58,196/- வெறும் இரண்டே வருடத்தில் பெறக்கூடிய சேமிப்பு திட்டம்
| மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |














