55 ரூபாய் செலுத்தினால் மாதம் மாதம் Rs.3000/- வருமானமாக பெறும் அருமையான திட்டம்..!

Advertisement

Pmsyms Scheme Details in Tamil

நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உதவியாக இருக்கும். நாம் அனைவருமே சம்பாதிக்கும் பணத்தை சரியாக பயன்படுத்தவேண்டும் என்று தான் ஆசை படுவோம். அதேபோல் முக்கியமாக சொல்லப்போனால் நம்முடைய பணத்தை முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் கிடைக்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற்று வருவோம். ஒரு சிலர் பென்ஷன் வாங்குவார்கள். ஒரு சிலர் பென்ஷன் வாங்கமாட்டார்கள். அவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். அதாவது அவர்களின் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு நிலையான வருமானம் தரும் வகையில் அருமையான திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Pmsyms Scheme Details in Tamil:

இன்று நாம் பார்க்க போகும் திட்டம் என்னவென்றால் Pradhan Mantri Shram Yogi Maan-dhan திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.

அதாவது முதலீடு செய்து வந்தால் உங்களின் 60 வயதிற்கு பிறகு மாதம் மாதம் 3,000 ரூபாய் வட்டியாக அதாவது பென்ஷனாக பெற முடியும்.

இந்த திட்டத்தை யார் பெயரில் துவங்குகிறீர்களோ அந்த நபரின் மனைவிகளோ அல்லது கணவனாக இருக்கும் பட்சத்தில் இந்த 3000 ரூபாயில் பாதி தொகை அதாவது 1,500 ரூபாய் பென்ஷனாக பெற முடியும்.

யார் சேரலாம்:

இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.

அதேபோல் உங்களுடைய மாத வருமானம் 15,000 ரூபாய்க்கு கீழ் இருக்கவேண்டும். அதேபோல் நீங்கள் எந்த ஒரு வரியும் செலுத்த கூடாது. எந்த வித பென்ஷன் திட்டத்திலும் சேர்ந்து இருக்க கூடாது.

ஏப்ரல் 30 தான் கடைசி தேதி  400 நாட்களில் Rs.5,45,000/- தரும் சேமிப்பு திட்டம் 

இதனை எங்கு தொடங்கலாம்:

Pradhan Mantri Shram Yogi Maan-dhan திட்டத்தில் எங்கு துவங்கலாம் என்றால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் community service center (csc) சென்டரில் சேரலாம்.

தேவையான ஆவணம்:

  • ஆதார் கார்டு எண்
  • ஷேவிங் கணக்கு
  • போன் நம்பர்

அதுபோல் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகையை முதலீடு செய்யவேண்டும் என்பது உங்களின் வயதை பொறுத்து மாறுபடும்.

உதாரணாமாக 18 வயதில் சேர்ந்தீர்கள் என்றால் மாதம் மாதம் 55 ரூபாய் உங்களின் 60 வயது வரை இந்த தொகையை செலுத்தவேண்டும். அதே தொகையை அரசு உங்களின் பெயரில் முதலீடு செய்யும். ஆகவே இது ஒரு நல்ல திட்டம் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள்..!

5 வருடத்தில் Rs.14,50,000/- தரும் தபால் நிலையத்தின் அசத்தலான திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement