மாதம் மாதம் 9,250/- ரூபாய் வருமானம் தரும் அருமையான திட்டம் கடைசி தேதி மார்ச் – 31..!

Advertisement

Pmvvy Scheme Details in Tamil

நம் அனைவருக்கும் சேமிக்கிறது மிகவும் முக்கியமான ஒன்றாகும் அல்லவா..! அது தான் சரியான சமயத்தில் நமக்கு உதவி செய்யும். அதேபோல் சிறு சேமிப்பு மிகவும் நன்மை ஆகும். மேலும் நமக்கு சேமிப்பதன் மூலம் லாபம் இருக்கவேண்டும் என்று நிறைய வகையான திட்டங்களை போஸ்ட் ஆபிஸ், LIC, வங்கிகள் என அனைத்து இடங்களில் இதுபோன்ற நிறைய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் Pothunalam.com ஒவ்வொரு வகையான திட்டங்களை பற்றி தெரிந்துகொள்வதற்கு தினமும் பதிவிட்டு வருகிறது. ஆகவே இந்த பதிவின் மூலம் மாதம் மாதம் வருமானம் தரும் திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

Pmvvy Scheme Details in Tamil:

இந்த திட்டத்தின் கடைசி தேதி மார்ச் 31 ஆகும். இந்த திட்டத்தில் மொத்தமாக ஒரு தொகையை முதலீடு செய்யவும். அதன் மூலம் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை வருமானமாக பெறமுடியும்.

இந்த திட்டம் Government திட்டம் என்பதால் இதில் எந்த ஒரு பிரச்சனைகளும் ஏற்படாது. அதேபோல் நாம் முதலீடு செய்த தொகை மாதம் மாதம் வருமானம் கிடைக்கும். அதேபோல் எவ்வளவு தொகை முதலீடு செய்கீறீர்களோ அது அப்படியே முதிர்வு காலம் முடிந்த பிறகு கிடைத்துவிடும்.

வயது தகுதி:

இந்த திட்டத்தில் 60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது. 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டும் தான் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.

400 நாட்களில் Rs.3,25,938 ரூபாய்க்கு மேல் லாபம் தரும் அருமையான சேமிப்பு திட்டம்

எங்கு தொடங்க வேண்டும்:

இந்த திட்டத்தை LIC நிறுவனத்தில் அல்லது ஆன்லைன் மூலம் கூட இந்த திட்டத்தில்  சேரலாம்.

பென்ஷன் வழங்கும் நிலை:

இந்த திட்டத்தின் பென்ஷன் தொகை அதாவது வட்டி 4 விதமாக வழக்கப்படுகிறது. மாதம் மாதம், 3 மாதம், 6 மாதம், 1 வருடம் வழங்கப்படுகிறது. இதில் உங்களுக்கு எது உதவியாக உள்ளதோ அதனை நீங்கள் பெறலாம்.

எவ்வளவு தொகை முதலீடு செய்யலாம்:

முதிர்வு காலம் குறைந்தபட்ச தொகை  அதிகபட்ச தொகை 
மாதம்  1,62,162/- 15,00,000/-
3 மாதம்  1,61,074/- 14,84,933/-
6 மாதம்  1,59,574/- 14,76,064/-
1 வருடம்  1,56,658/- 14,49,086/-

 

வட்டி விகிதம்:

இந்த திட்டத்தில் ஒவ்வொரு வகையான திட்டத்திற்கும் ஒவ்வொரு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!

  • மாதம் மாதம் – 7.40 சதவீதம்
  • 3 மாதம் – 7.45 சதவீதம்
  • 6 மாதம் – 7.52 சதவீதம்
  • 1 வருடம் – 7.66 சதவீதம்

36 மாதத்தில் 3,83,000/- பெறும் அருமையான திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement