மாதம் Rs.18,500/- தரும் மாத வருமான சேமிப்பு திட்டம்..! PMVVY Scheme Full Details in Tamil..!
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இந்தியாவில் உள்ள 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான அரசு மானியம் பெறும் ஓய்வூதியத் திட்டமான பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜா திட்டத்தை எல்ஐசி நிர்வகித்து வருகிறது. இந்த பென்ஷன் திட்டம் குறித்த தகவலை பற்றி தான் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். இந்த பென்ஷன் திட்டத்தை பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் நபர்கள் இந்த பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள்.
PMVVY Scheme Full Details in Tamil:
பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜா திட்டம் என்பது ஒரு Single Investment திட்டம் ஆகும். அதாவது நீங்கள் இந்த திட்டத்தில் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்தால் போதும். மாதம் மாதம் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
இந்த திட்டத்தில் நீங்கள் கணக்கை இந்த மாதம் தொடங்கிவிட்டீர்கள் என்றால் அடுத்த மாதத்தில் இருந்தே நீங்கள் உங்களுக்கான பென்ஷன் தொகையை கேரண்டியுடன் பெற முடியும்.
இந்த திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்துவதில் மிகவும் நம்பகத்தனமான பென்ஷன் ஸ்கீம் என்று சொல்லலாம். ஆக மாதம் மாதம் உங்களுக்கு வழங்கப்படும் பென்ஷனையும், உங்களது முதலீட்டு தொகையையும் நீங்கள் கேரண்டியாக பெறலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
50 லட்சம் லாபம் கிடைக்கும் அருமையான திட்டம் இது தான்..!
யாரெல்லாம் இந்த திட்டத்தில் சேரலாம்?
இந்த பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜா திட்டத்தில் யாரெல்லாம் சேர முடியும் என்றால் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மட்டும் தான் இந்த திட்டத்தில் அக்கௌன்ட் ஓபன் செய்ய முடியும்.
எப்படி இந்த திட்டத்தில் இணைவது?
பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜா திட்டத்தை எல்ஐசி நிர்வகித்து வருகிறது. ஆக நீங்கள் இந்த திட்டத்தில் இணைய விரும்பினால் LIC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அக்கௌன்ட் ஓபன் செய்யலாம் அல்லது LIC -யின் கிளைகளுக்கு சென்று நேரடியாக அக்கௌன்ட் ஓபன் செய்யலாம்.
Pension Frequency:
இந்த திட்டத்தின் கால அளவு 10 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் நான்கு வகைகளில் உங்களுக்கு பென்ஷன் வழங்கபடுகிறது. அதாவது மாதம் மாதம் (Monthly) பென்ஷன் வழங்குவது, அல்லது மூன்று மாதங்களுக்கு (Quarterly) ஒரு முறை பென்ஷன் வழங்குவது, அல்லது ஆறு மாதங்களுக்கு (Half yearly) ஒரு முறை பென்ஷன் வழங்குவது, அல்லது ஒவ்வொரு வருடமும் (Yearly) பென்ஷன் வழங்குவது என்று நான்கு முறையில் பென்ஷன் வழங்கபடுகிறது. உங்களுக்கு எந்த ஆப்சன் வேண்டுமோ அதனை தேர்வு செய்து 10 ஆண்டுகள் வரை பென்ஷன் வாங்கலாம்.
முதலீட்டு தொகை:
இந்த திட்டத்தில் Pension Frequency-ஐ பொறுத்து குறைந்தபட்ச தொகை மற்றும் அதிகபட்ச தொகை மாறுபடும் அதனை கீழ் காணலாம் வாங்க.
PMVVY Scheme Full Details in Tamil
முதலீட்டு தொகை | Monthly | Quarterly | Half yearly | Yearly |
குறைந்தபட்சம் | ரூ.1,62,162 | ரூ.1,61,074 | ரூ.1,59,574 | ரூ.1,56,658 |
அதிகபட்சம் | ரூ.15,00,000 | ரூ.14,89,933 | ரூ.14,76,064 | ரூ.14,49,086 |
பென்ஷன் தொகை எவ்வளவு வழங்கப்படும்?
பென்ஷன் தொகை | Monthly | Quarterly | Half yearly | Yearly |
குறைந்தபட்சம் முதலீட்டிற்கு | ரூ.1,000 | ரூ.3,000 | ரூ.6,000 | ரூ.12,000 |
அதிகபட்சம் முதலீட்டிற்கு | ரூ.9,250 | ரூ.27,750 | ரூ.55,500 | ரூ.1,11,000 |
வட்டி:
இந்த திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் Monthly ஆப்ஷனை தேர்வு செய்தால் உங்களுக்கு 7.40% வட்டி வழங்கப்படும். Quarterly ஆப்ஷனை தேர்வு செய்தால் 7.45% வட்டி வழங்கப்படும். Half yearly ஆப்ஷனை தேர்வு செய்தால் 7.52% வட்டி வழங்கப்படும். மற்றும் Yearly ஆப்ஷனை தேர்வு செய்தால் 7.66% வட்டி வழங்கட்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபீஸின் அசத்தலான ஆயுள் காப்பீடு திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
குறிப்பு:
இந்த திட்டத்தில் உங்களுக்கு Maturity Benefits எதுவும் வழங்கப்படுவதில்லை. நீங்கள் முதலீடு செய்த தொகையை இந்த திட்டத்தின் கால அளவான 10 வருடம் முடிந்த பிறகு நீங்கள் எவ்வளவு தொகை முதலீடு செய்திருந்தீர்களோ அந்த தொகையை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் இணைத்த பிறகு இடைப்பட்ட காலத்தில் இந்த திட்டத்தை மூட வேண்டும் என்றால் அதற்கான ஆப்சன் வழங்கபடுகிறது. இருப்பினும் இந்த திட்டத்தில் இணைத்த மூன்று வருடத்திற்கு பிறகு தான் அதனை செய்ய முடியும். இப்படி குளோஸ் செய்யும்போது உங்கள் டெபாசிட் தொகையில் இருந்து 2% சார்ஜ் கட் செய்துகொள்வார்கள்.
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்:
குறைந்தபட்ச தொகையாக நீங்கள் ரூ.1,62,162 முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு மாதம் மாதம் 1000 ரூபாய் பென்ஷன் வழங்கப்படும். ஆக 10 வருடத்தில் உங்களுக்கு 1,20,000/- ரூபாய் பென்ஷன் வழங்கப்படும். பிறகு 10 வருடம் கழித்த பிறகு உங்களது டெபாசிட் தொகையான 1,62,162 ரூபாயை திரும்ப பெறலாம்.
2 லட்சம் முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு மாதம் மாதம் 1,233/- ரூபாய் பென்ஷன் வழங்கப்படும். ஆக 10 வருடத்தில் உங்களுக்கு 1,48,000/- ரூபாய் பென்ஷன் வழங்கப்படும். பிறகு 10 வருடம் கழித்த பிறகு உங்களது டெபாசிட் தொகையான 2 லட்சத்தை திரும்ப பெறலாம்.
5 லட்சம் முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு மாதம் மாதம் 3,083/- ரூபாய் பென்ஷன் வழங்கப்படும். ஆக 10 வருடத்தில் உங்களுக்கு 3,70,000/- ரூபாய் பென்ஷன் வழங்கப்படும். பிறகு 10 வருடம் கழித்த பிறகு உங்களது டெபாசிட் தொகையான 5 லட்சத்தை திரும்ப பெறலாம்.
10 லட்சம் முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு மாதம் மாதம் 6,166/- ரூபாய் பென்ஷன் வழங்கப்படும். ஆக 10 வருடத்தில் உங்களுக்கு 7,40,000/- ரூபாய் பென்ஷன் வழங்கப்படும். பிறகு 10 வருடம் கழித்த பிறகு உங்களது டெபாசிட் தொகையான 10 லட்சத்தை திரும்ப பெறலாம்.
15 லட்சம் முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு மாதம் மாதம் 9,250/- ரூபாய் பென்ஷன் வழங்கப்படும். ஆக 10 வருடத்தில் உங்களுக்கு 11,00,000/- ரூபாய் பென்ஷன் வழங்கப்படும். பிறகு 10 வருடம் கழித்த பிறகு உங்களது டெபாசிட் தொகையான 15 லட்சத்தை திரும்ப பெறலாம்.
இந்த திட்டத்தில் கணவன் மனைவி இருவரும் இணைந்து ஜாயிண்ட் அகவுண்டாக 30 லட்சம் முதலீடு செய்தால் அவர்களுக்கு மாதம் மாதம் ரூ.18,500/- பென்ஷன் வழங்கப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
SBI-யில் புதியம் திட்டம் ஒன்று வந்துள்ளது..! மிஸ் பண்ணிடாதீங்க..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |