மாதம் 1000 ரூபாய் செலுத்தி 3 லட்சம் பெரும் ஆண் குழந்தைகளுக்கான தபால் துறை சேமிப்பு திட்டம்..!

Advertisement

Ponmagan Scheme in Post Office 

பொதுவாக சேமிப்பு திட்டம் என்றவுடன் நூற்றில் பெரும்பாலான வீடுகளில் பெண் குழந்தைகளுக்கான திட்டங்களில் தான் சேமிக்க ஆரம்பம் செய்கிறார்கள். ஏனென்றால் பெண் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையினை கருதி இவ்வாறு சேமிக்கிறார்கள். அந்த வகையில் ஒரு சில பெற்றோர்கள் ஆண் குழந்தைகளின் பெயரிலும் சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இவ்வாறு நினைத்தாலும் கூட எந்த திட்டத்தில் சேமிப்பது என்ற குழப்பம் இருக்கிறது. இப்படிப்பட்ட குழப்பம் உள்ளவர்களுக்கு என்று தபால் துறையில் உள்ள பொன்மகன் சேமிப்பு திட்டமானது இருக்கிறது. எனவே இன்று ஆண் குழந்தைகளுக்கு என்று உள்ள பொன்மகன் சேமிப்பு திட்டத்தினை பற்றிய முழு விவரத்தையும் பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பொன்மகன் சேமிப்பு திட்டம் 2023:

பொன்மகன் சேமிப்பு திட்டம் 2023

இந்த பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் சேர வேண்டும் என்றால் உங்களுக்கு வயது வரம்பு என்பது எதுவும் கிடையாது. ஆகையால் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் அனைவரும் அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸிலேயே கணக்கினை திறந்து சேமிக்க தொடங்கலாம்.

தபால் துறையில் 1000 ரூபாய் சேமித்தால் 5 வருடத்தில் Rs. 7,34,664 ரூபாய் கிடைக்கும்..

சேமிப்பு தொகை:

இத்தகைய திட்டத்தில் குறைந்தப்பட்ச சேமிப்பு தொகை 500 ரூபாய் முதல் அதிகப்பட்ச தொகை 1,50,000 ரூபாய் ஆகும்.

மேலும் இந்த கணக்கினை நீங்கள் திறந்து சேமிக்க தொடங்கிவிட்டீர்கள் என்றால் வருடத்திற்க்கு ஒரு முறையாவது பணம் செலுத்த வேண்டும்.

வட்டி விகிதம்:

இதில் உங்களுக்கான சேமிப்பு தொகையாக தற்போது 7.1% வரை அளிக்கப்படுகிறது.

மேலும் வட்டி விகிதம் என்பது மூன்று மாதத்திற்கு ஒருமுறை வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

5 ஆண்டில் வட்டி மட்டும் 3,07,500 ரூபாய் அளிக்கும் தபால் துறை சீனியர் சிட்டிசன் திட்டம் 

முதிர்வு காலம்:

பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் முதிர்வு காலமாக 15 வருடம் வழங்கப்படுகிறது. மேலும் 15 வருடம் முடிந்த நீங்கள் கணக்கினை தொடங்க வேண்டும் என்றால் Extension With Deposit மற்றும் Extension Without Deposit என்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

கடன் வசதி:

இந்த திட்டத்தில் நீங்கள் சேர்ந்த பிறகு லோன் எதுவும் வேண்டும் என்றால் 3 முதல் 6 ஆண்டுகளுக்குள் வாங்கி கொள்ளலாம். மேலும் 7வருடம் முடிந்த பிறகு குறிப்பிட்ட தொகையினை இதில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் கிடைக்கும் தொகை எவ்வளவு:

Ponmagan Scheme in Post Office 
சேமிப்பு தொகை  மொத்த சேமிப்பு தொகை  வட்டி தொகை  அசல் தொகை 
1,000 ரூபாய் 1,80,000 ரூபாய் 1,35,568 ரூபாய் 3,15,568 ரூபாய்
2,000 ரூபாய் 3,60,000 ரூபாய் 2,71,136 ரூபாய் 6,31,136 ரூபாய்
5,000 ரூபாய் 9,00,000 ரூபாய் 6,77,840 ரூபாய் 15,78,400 ரூபாய்
10,000 ரூபாய் 18,00,000 ரூபாய் 13,55,680 ரூபாய் 31,55,680 ரூபாய்
12,500 ரூபாய் 22,50,000 ரூபாய் 16,94,000 ரூபாய் 39,44,600 ரூபாய்

 

மூன்று மாதத்திற்கு ஒரு முறை 61,500 ரூபாய் வருமானம் தரும் தபால் துறை திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement