ஆண் குழந்தைக்கு சேமிப்பு திட்டம் | Post Office 1000 Rs Scheme in Tamil..!

Advertisement

ஆண் குழந்தைக்கு சேமிப்பு திட்டம் | Post Office 1000 Rs Scheme in Tamil..!

பொதுவாக பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் சேமிக்கும் பழக்கம் என்பது கண்டிப்பாக இருக்கும். ஏனென்றால் பெண் குழந்தையின் எதிர்கால வாழ்க்கைக்காக வீட்டில் உள்ளவர்கள் ஏதோ ஒரு சேமிப்பு திட்டத்தின் கீழ் பணத்தை சேமித்து வருகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் பெண் குழந்தைகளுக்கு என்று தனியாக எண்ணற்ற திட்டங்கள் இடம் பெற்றிருக்கிறது. இவ்வாறு இருக்கையில் ஆண் குழந்தைகளுக்கு தனியாக போஸ்ட் ஆபீஸிலும் பல திட்டங்கள் உள்ளது. ஆனால் இத்தகைய திட்டங்களை பற்றி நாம் அதிகமாக கேள்வி பட்டிருக்கமாட்டோம். அதனால் இன்று ஆண் குழந்தைகளுக்கு என்று உள்ள குறைந்த முதலீட்டில் அதிக பணத்தினை பெறக்கூடிய சேமிப்பு திட்டத்தினை பற்றி தான் பார்க்கப்போகிறோம். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் தபால் துறையிலேயே உள்ளது.

பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம்:

பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம்

போஸ்ட் ஆபீசில் உள்ள பொன்மகன் பொது நிதி திட்டத்தில் 10 வயதிற்கு கீழ் உள்ள ஆண் குழந்தைகள் 500 ரூபாய் முதலீட்டில் இந்த திட்டத்தின் மூலம் சேமிக்க தொடங்கலாம்.

இத்தகைய பொன்மகன் திட்டமானது 500 ரூபாய் முதல் 5,00,000 ரூபாய் வரை முதலீடு செய்து 9.7% வட்டி விகிதத்துடன் 15 வருடம் வரை தொடரக்கூடிய திட்டம் ஆகும்.

மேலும் 5 வருடங்கள் கழித்த இந்த திட்டத்தின் கீழ் உங்களுடைய குழந்தையின் பெயரில் குறிப்பிட்ட அளவிலான கடன் தொகையினை பெற்று கொள்ள முடியும். அதுமட்டும் இல்லாமல் 7 ஆண்டில் முதலீடு செய்த தொகையில் பாதியினை பெற்று கொள்ளலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா

மாதாந்திர சேமிப்பு திட்டம்:

மாதாந்திர சேமிப்பு திட்டம்ஆண் குழந்தை பெயரில் Post Office Monthly Income Scheme தொடங்க வேண்டும் என்றால் முதலில் போஸ்ட் ஆபிஸில் கணக்கு வைத்து இருக்க வேண்டும். அதன் பிறகு 1000 ரூபாய் முதலீடு முதல் 9,90,000 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்து இந்த திட்டத்தினை தொடங்கலாம்.

இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 7.4% ஆகும். 1000 ரூபாய் முதலீட்டில் தொடங்க கூடிய இந்த திட்டமானது 5 வருடம் வரை நீட்டிக்க கூடியதாகும்.

 

போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கான ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான வட்டி விகிதங்கள் 2023 

Post Office National Saving Certificate Scheme in Tamil:

 post office national saving certificate scheme in tamil

தபால் துறையில் உள்ள NSC திட்டத்தினை நீங்கள் எந்த போஸ்ட் ஆபிஸில் வேண்டுமானாலும் புதிதாக தொடங்கலாம். இந்த திட்டம் 1000 ரூபாய் முதலீட்டில் இருந்து தொடங்குகிறது. ஆனால் எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் முதலீடு செய்து கொள்ளலாம்.

NSC திட்டத்தின் வட்டி விகிதமானது 7.7% ஆகும். இத்தகைய சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளுக்கு மட்டும் உள்ள 5 வருடம் சேமிப்பு திட்டம் ஆகும்.

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

Advertisement