Rs.399/-ரூபாயில் Rs.10,00,000/- விபத்துகாப்பீடு எல்லோரும் வாங்கலாம் – Post Office 399 Insurance Plan in Tamil
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.. வெறும் 399 ரூபாய்க்கு 10 லட்சம் விபத்து காப்பீட்டினை வழங்குகிறது இந்திய தபால் துறை. இந்த காப்பீடு திட்டத்தை பற்றி முழுமையான தகவல்களை இப்பொழுதும் நாம் படித்தறியலாம், அதாவது யாரெல்லாம் இந்த விபத்து காப்பீடு பெற தகுதியான நபர்கள், எப்படி இந்த காப்பீடு வாங்குவது போன்ற முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
TATA AIG Group Accident Guard Policy Scheme Tamil:
இந்த தபால் துறை TATA AIG Group Accident Guard என்ற பெயரில் பொதுமக்களுக்கு வெறும் 399 ரூபாய்க்கு 10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு வழங்குகிறது.
இந்த காப்பீட்டினை 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் முதல் 65 வயதிற்குள் இருக்கும் அனைவருமே இந்த விபத்து காப்பீடு பெற தகுதியானவர்கள்.
TATA AIG Group Accident Guard Policy-யின் ஒரு வருடத்திற்கான பிரீமியம் தொகை 399 ரூபாய் மட்டுமே.
உங்கள் ஊரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் ஒவ்வொரு வருடத்திற்கும் வெறும் 399 ரூபாய் செலுத்தி இந்த இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் பெறலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 60,000 வட்டி தரும் மத்திய அரசு சேமிப்பு திட்டம்..!
Post Office 399 Insurance Plan in Tamil – பயன்கள்:
பாலிசி ஹோல்டர் விபத்து மூலம் இறந்தால் அவர்களுடைய நாமினிக்கு 10 லட்சம் வழங்கப்படுகிறது.
விபத்து மூலமாக கை கால்களை இழந்தால் 10 லட்சம் வழங்கப்படும்.
அதேபோல் விபத்து மூலமாக ஒரு கை, ஒரு காலினை இழந்தால் 10 லட்சம் வழங்கப்படும்.
இப்பதினால் உடல் சிதைவு அல்லது பக்கவாதம் ஏற்பட்டால் 10 லட்சம் வழங்கப்படும்.
விபத்தினால் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வந்தால் அதிகபட்சமாக 60 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இந்த பாலிசியில் விபத்து காப்பீடு மட்டுமல்லாமல் இரண்டு குழந்தைகளுக்கு அதிகபட்சமாக காப்பீடு தொகையில் இருந்து 10 சதவீதம் வரை Education Benefit ஆக நீங்கள் பெறலாம்.
விபத்தினால் மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சிகிச்சை பெற்று வந்தால் அந்த சிகிச்சைக்கான செலவாக 30 ஆயிரம் வரை வழங்கப்படும்.
விபத்தினால் காயம் ஏற்பட்டு தினமும் மருத்துவனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தால் ஒவ்வொரு நாளுக்கு 1000 ரூபாய் வீதம் முதல் 10 நாட்களுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும்.
Family Transportation Benefits-க்கு 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
பாலிசி ஹோல்டர் இறந்த பிறகு அவர்களுடைய நாமினிக்கு 10 லட்சம் வழங்குவதுடன் இறந்தவரின் இருந்து சடங்கிற்காக 5000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 வருடத்தில் 2,94,132 ரூபாய் பெறக்கூடிய அருமையான பிக்சட் டெபாசிட் திட்டம்..!
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |