தங்கம் வாங்குவதற்கு சிறந்த திட்டம்..! இன்றே சேர்ந்திடுங்கள்.!

Advertisement

தங்க பத்திரம் சேமிப்பு திட்டம் | Post Office Gold Bond Scheme 2022 in Tamil 

இந்திய அஞ்சல் துறையில் பல வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அதாவது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புச் சான்றிதழ், சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற திட்டங்கள் உள்ளது. தபால் நிலையத்தில் பல நபர்கள் இணைந்துள்ளனர். இதை தொடர்ந்து மத்திய அரசு தங்க சேமிப்பு பத்திரம் திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டத்தில் இருக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ தமிழக அரசின் இலவச மாட்டு கொட்டகை அமைக்கும் திட்டம் 2022

Post Office Gold Bond Scheme 2022 in Tamil: 

தங்க பத்திரம் சேமிப்பு திட்டம்

தங்கம் வாங்குவது என்பது சாமானிய மக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. அனைத்து தர மக்களுக்கும் உதவிடும் வகையில் தபால் துறையில் சேமிப்பு திட்டம் உள்ளது.

இந்த தங்க சேமிப்பு திட்டத்தில் ஒரு தடவை ஒரு கிராமுக்கு உள்ள தொகையை செலுத்து விடலாம். எத்தனை கிராமுக்கு அல்லது பவுனுக்கு வேண்டிய தொகையை ஒரு தடவை செலுத்தி விடலாம். இந்த திட்டத்தின் முதிர்வு ஆண்டு 5 வருடம் அல்லது 8 வருடம்.

நீங்கள் 5 வருடம் கழித்து பாலிசியை முடிக்கும் போது அப்போது பவுனின் விலை கணக்கு செய்யப்பட்டு சேமிப்புதாரர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஆண்டிற்கு 2.5 % வட்டி அளிப்படுகிறது.

ஆவணங்கள்:

இத்திட்டத்தில் சேரும் விண்ணப்பதாரர்கள் ஆதார்கார்டு, பான் கார்டு, வங்கி சேமிப்பு புத்தகம், புகைப்படம் போன்றவை தேவைப்படும்.

இதையும் படியுங்கள் ⇒ தபால் துறையில் ரூபாய் 399 செலுத்தினால் பத்து லட்சம் வரையிலான காப்பீடு திட்டம் ..!

மேலும் இது போன்ற சேமிப்பு திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் 👉👉👉 Schemes

 

Advertisement