போஸ்ட் ஆபிஸில் இப்படி ஒரு ஆயுள் காப்பீட்டு திட்டமா..? 10 ஆயிரம் முதலீடு செஞ்சா 10,00000 வரை லாபம் கிடைக்குமா..!

Post Office Gram Priya Scheme Details in Tamil

Post Office Gram Priya Scheme

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். தினமும் இந்த பதிவின் வாயிலாக சேமிப்பு திட்டங்கள் பலவற்றை பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று போஸ்ட் ஆபிஸில் இருக்கும் ஒரு அருமையான ஆயுள் காப்பீட்டு திட்டத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

இதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க..! 2 வருடத்தில் 2,32,044 ரூபாய் வரை லாபம் தரும் பெண்களுக்கான அருமையான திட்டம்..!

Post Office Gram Priya Scheme Details in Tamil: 

Post Office Gram Priya Scheme Details

அஞ்சல் அலுவலக கிராம பிரியா (Gram Priya) திட்டம் என்பது கிராமப்புற மக்களுக்கான குறுகிய கால பணத்தை திரும்பப் பெறும் திட்டமாகும். இது கிராமப்புற பகுதியில் உள்ள நலிவடைந்த பிரிவினருக்கு காப்பீடு வழங்குகிறது.

அதாவது பணத்தை திரும்பப் பெறும் குறுகிய காலக் காப்பீட்டுத் திட்டமாகும். இதில் பாலிசிதாரர் குறிப்பிட்ட கால இடைவெளியில் பலன்களைப் பெறுவார். குறிப்பிட்ட கால இடைவெளியில் வருமானம் மற்றும் பலன்கள் தேவைப்படும் நபர்களுக்கு இந்தத் திட்டம் பொருத்தமானதாக இருக்கும்.

இந்த திட்டத்தில் பாலிசிதாரர் 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் பிரீமியத்தை செலுத்த வேண்டும். 10 வருட பாலிசி காலத்தின் போது போனஸ் விகிதத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் போனஸ் திரட்டப்படும்.

போஸ்ட் ஆபிஸில் 1000 ரூபாய் போனஸ் தரும் ஆயுள் காப்பீட்டு திட்டம்

தகுதி அளவுகோல்கள்:

  1. இந்த திட்டத்தில் சேரும் நபர்களுக்கு குறைந்த பட்சம் 20 வயதாகவும் அதிகபட்சம்   45 வயதும் இருக்க வேண்டும்.
  2. மேலும் சம்பளம் பெரும் நபர்கள் இந்த திட்டத்தில் சேர தகுதியானவர்கள்.
  3. இந்த அஞ்சல் அலுவலக கிராம பிரியா (Gram Priya) திட்டத்தின் கொள்கை காலம் 10 ஆண்டுகள் ஆகும்.

அஞ்சல் அலுவலக கிராம பிரியா திட்டத்தின் பலன்கள்:

  • பாலிசிதாரருக்கு 10 ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் தொகையின் அளவிற்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது.
  • பாலிசிதாரர் பாலிசி காலம் வரை உயிர் பிழைத்திருந்தால், 10 வருட RPLI திட்டத்தின் கீழ் உயிர்வாழும் பலன் வழங்கப்படுகிறது.
  • இதில் வறட்சி, வெள்ளம், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது 1 ஆண்டு வரை பிரீமியம் பாக்கியாக வட்டி வசூலிக்கப்படுவதில்லை.
  • இந்த திட்டத்தின் கீழ் சரண்டர் தொகை செலுத்தப்படாது.

மரணப்பலன்:

10 வருட திட்ட காலத்தில் பாலிசிதாரருக்கு துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டால், முழு காப்பீட்டு தொகை மற்றும் பிற போனஸ் (இறந்த தேதி வரை) பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்கப்படும்.

என்னது போஸ்ட் ஆபீஸில் இப்படி ஒரு அருமையான திட்டம் இருக்கா இத்தனை நாளா இது தெரியாம போச்சே

 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 போஸ்ட் ஆபீஸில் இன்சூரஸ் எடுத்தால் எவ்வளவு போனஸ் வழங்கப்படுகிறது தெரியுமா

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil