Post Office Income Scheme NSC in Tamil
மனிதனின் வாழ்க்கையில் சேமிப்பு என்பது ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் நாம் வாழ்நாள் முழுவதும் வேலை பார்த்து கொண்டே இருக்க முடியாது. 55 வயதிற்கு மேல் மனிதனுக்கு ஓய்வு தேவைப்படும். அதனால் அப்போது நாம் உட்கார்ந்து சாப்பிட வேண்டுமென்றால் இப்போது சம்பாதிக்கின்ற பணத்தை சேமித்து வைக்க வேண்டும். சேமிப்பைப் பொறுத்தவரை இந்தத் திட்டம் உங்களுக்கு பல்வேறு நன்மைகளை தரும். மாதம் மாதம் இந்த திட்டத்தின் மூலம் வருமானத்தை பெறமுடியும். இந்த திட்டம், தொடர்பான அனைத்து தகவல்களையும் இங்கே நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
Post Office National Savings Certificate Interest Rate in Tamil:
தகுதி:
18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் இணைந்து பயன் அடையலாம்.
டெபாசிட் தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூபாய் 1000 முதல் முதலீடு செய்யலாம்.
அதிகபட்சமான எவ்வளவு பெரிய தொகையும் முதலீடு செய்யலாம்.
வட்டி:
இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் போதும். வட்டி தொகையாக 7.7% வட்டி வழங்கப்படுகிறது.
நீங்கள் திட்டத்தில் இணையும் போது வழங்கப்படும் வட்டி 5 ஆண்டுகள் வரை நீடிக்கும்.
டெபாசிட் காலம்:
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
வருமானம் எவ்வளவு ?
முதிர்வு காலம் | டெபாசிட் தொகை | மொத்த வட்டி தொகை | முதிர்வு கால தொகை |
5 வருடம் | Rs. 1,000 | Rs. 449 | Rs. 1,449 |
Rs. 3,000 | Rs. 1408 | Rs. 4,408 | |
Rs. 5,000 | Rs. 2347 | Rs. 7347 | |
Rs. 10,000 | Rs. 4,693 | Rs. 14,693 | |
Rs. 50,000 | Rs. 22,452 | Rs. 72,452 | |
Rs. 1,00,000 | Rs. 44,903 | Rs. 1,44,903 | |
Rs. 3,00,000 | Rs. 1,40,798 | Rs. 4,40,798 | |
Rs. 5,00,000 | Rs. 2,34,664 | Rs. 7,34,664 | |
Rs. 10,00,000 | Rs. 4,69,328 | Rs. 14,69,328 |
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |