போஸ்ட் ஆபிசில் ஒரு வருடத்திற்கு 299 செலுத்தினால் உங்களுக்கு 10 லட்சம் கிடைக்கும்..!

Post Office Insurance Plan Details in Tamil

Post Office Insurance Plan Details in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய காலகட்டத்தில் நமக்கு அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று அந்த கடவுளை தவிர வேறு யாராலும் சொல்லிவிட முடியாது. இன்று நாம் இந்த உலகில் நடமாடிக்கொண்டிருந்தாலும் நாளை நாம் இந்த உலகில் இல்லாமல் போகக்கூடிய ஒரு நிலைமை ஏற்படலாம். ஆக நாம் இருக்கும் வரை அனைவருடனும் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு செல்ல வேண்டும். நாம் இந்த உலகை விட்டு செல்லும் போது தன் குடுப்பதிற்கு மகிழ்ச்சியை கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். தன் குடுப்பதிற்கு மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக போஸ்ட் ஆபிஸின் இன்சூரன்ஸ் ஸ்கீமில் உங்கள் பெயரில் ஒரு இன்சூரன்ஸ் எடுங்கள். நீங்கள் இன்சூரன்ஸ் எடுக்கும்போது உங்களுக்கு திடீர் என்று ஏதாவது எதிர்பாராத சூழ்நிலையில் விபத்து ஏற்பட்டால் அப்போது இந்த இன்சூரன் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க போஸ்ட் ஆபிசில் ஒரு வருடத்திற்கு 299 ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்து பயன்பெறுங்கள்.

போஸ்ட் ஆபிசில் ஒரு வருடத்திற்கு 299 செலுத்தினால் உங்களுக்கு 10 லட்சம் கிடைக்கும்..!

போஸ்ட் ஆபிசில் உள்ள India Post Payments ஒரு வருடத்திற்கு வெறும் 299 ரூபாய்க்கு 10 லட்சரூபாக்கனா விபத்து காப்பீட்டை பொதுமக்களுக்கு வழங்குகின்றன. India Post Payments Bank

India Post Payments Bank TATA AIG Insurance-வுடன் சேர்ந்து Group Accident Guard Policy என்ற பெயரில் இரண்டு விதமான இன்சூரன்ஸை வழங்குகின்றன. ஒன்று 399 ரூபாய் இன்சூரன்ஸ் ஆகும். மற்றொன்று 299 ரூபாய் இன்ஸ்சுரன் பாலிசி ஆகும். இன்ற இரண்டு வகையான இன்சூரன்ஸ் ஸ்கீமும் விபத்து காப்பீட்டு திட்டம் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆண்களுக்கு 1000 ரூபாய் முதலீட்டில் போஸ்ட் ஆபீஸ் அருமையான 3 சேமிப்பு திட்டம்..!

வயது தகுதி:

இந்த இன்சூரன் ஸ்கீமை யாரெல்லாம் வாங்கலாம் என்றால் 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைவரும் இந்த இன்சூரன்ஸை பெறலாம்.

எங்கு அப்ளை செய்யலாம்?

இதற்கான வயது தகுதி உள்ளவர்கள் India Post Payments Bank கிளைகளிலோ அல்லது GTS மூலமாகவோ இந்த பாலிசியை வாங்கலாம்.

பிரீமியம் எவ்வளவு:

இந்த பாலிசியில் ஒரு ஒருவருடத்திற்க்கான பிரீமியம் எவ்வளவு என்றால் 299 ரூபாய் ஆகும். ஆக ஒவ்வொரு வருடமும் நீங்கள் 299 ரூபாய் பணம் கட்டி நீங்கள் இந்த பாலிசியை ரினிவல் செய்ய வேண்டும்.

299 ரூபாய் இன்சூரன்ஸ் ஸ்கீமின் சிறப்பம்சம் என்ன?

இந்த பாலிசியை வாங்கிய பிறகு இந்த பாலிசியை வாங்கியவர் விபத்தில் இறந்துவிட்டால் அவர்களுடைய நாமினிக்கு 10 லட்சரூபாய் பணம் வழங்கப்படும்.

விபத்தில் கை, கால்களை இழந்தால் 10 லட்சம் வழங்கப்படும்.

விபத்தினால் ஒரு கை அல்லது ஒரு கால் இழந்தால் 10 லட்சம் வழங்கப்படும்.

விபத்தினால் உடல் சிதைவு அல்லது பக்கவாதம் ஏற்பட்டால் 10 லட்சம் வழங்கப்படும்.

இந்த பாலிசி வாங்கியவர்கள் விபத்தினால் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வந்தால் அவர்களுக்கு அதிகபட்சமாக 60,000/- வரை பணம் வழங்கப்படும். ஒருவேளை உங்கள் மருத்துவ செலவு 60 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தால் அதற்க்கான பணத்தை மட்டும் இந்த பாலிசி மூலம் கிளைம் ஆகும்

விபத்தினால் நீங்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல் தினமும் அல்லது வாரத்தில் ஒருமுறை மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தால் அதற்கு நீங்கள் இந்த இன்சூரன் பாலிசி மூலம் 30,000/- வரை பணம் கிளைம் பண்ணிக்க முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆதார் கார்டு மட்டும் போதும் 5 லட்சம் வரை பணம் கிடைக்கும்..!

எந்த விபத்துகள் இந்த இன்சூரன்ஸில் கவர் ஆகாது?

தற்கொலை, Military Services or Operations, சண்டை, எய்ட்ஸ், பாக்டீரியா இன்பெக்சன், நோய், Dangerous Sports இதுபோன்றவற்றினால் இறந்தால் இந்த இன்சூரன்ஸ் பாலிசியில் நீங்கள் பணம் கிளைம் செய்துகொள்ள முடியாது.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil