தபால் துறையில் அருமையான காப்பீட்டு திட்டத்தில் மாத தொகையாக 50 ரூபாய் செலுத்தினால் போதும்.

post office insurance schemes in tamil

அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம்

வணக்கம் நண்பர்களே.! சம்பாதிக்கும் பணத்தை பாதுகாப்பான முறையில் எப்படி சேமிப்பது என்று பலரும் யோசித்து கொண்டிருப்பீர்கள். பணத்தை சம்பாதிப்பது முக்கியம் இல்லை. அந்த பணத்தை எப்படி இரண்டு மடங்காக ஆக்குவதற்கான வழி முறைகளையும் தெரிந்து கொள்வோம். தபால் துறையில் பல வகையான திட்டங்கள் உள்ளது. அதில் இன்றைய பதிவில் தெரிந்து கொள்வது Rural postal life insurance திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

Rural Postal Life Insurance in Tamil: 

இத்திட்டத்தில் குறைந்த பட்சம் 19 வயது அதிகபட்சம் வயது 55-குள் உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணையலாம்.

இதையும் படியுங்கள் ⇒ LIC தன் வர்ஷா புதிய பாலிசி திட்டத்தின் நன்மைகள் என்ன..?

மேலும் குறைந்தபட்ச பட்ச காப்பீட்டு தொகை 10,000 ரூபாய், அதிகபட்சம் காப்பீட்டு தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் 50 ரூபாய் ஆரம்ப மாத தொகையாக உள்ளது.

திட்டத்தின் சிறப்புகள்:

இத்திட்டத்தில் நீங்கள் நான்கு வருடம் சரியாக கடனை செலுத்தினால் அதன் பிறகு அதிலிருந்து கடன் பெற்று கொள்ளும் வசதியும் இருக்கிறது.

இத்திட்டத்தின் முதிர்வு காலம் குறைந்த பட்சம் ஆண்டுகள் 10 ஆண்டுகள், அதிகபட்சம் 55 ஆண்டுகள். முதிர்வு காலத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

எதிர்பாராத விதமாக பாலிசிதாரர் முதிர்வு காலத்திற்கு முன் இறந்து விட்டால் அவரது குடும்பத்தினருக்கு காப்பீட்டு தொகை மற்றும் அதற்கான வட்டியும் சேர்த்து வழங்கப்படும். 

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இத்திட்டத்திதை முடித்து கொள்ளலாம். ஆனால் அதற்கான போனஸ் ஏதும் வழங்க மாட்டார்கள். குறைந்த பிரீமியம் மற்றும் அதிக போனஸ். நாமினி மாற்றம் செய்யும் வசதியும் உள்ளது.

மேலும் இது போன்ற சேமிப்பு திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் 👉👉👉 Schemes