Post Office Joint Life Assurance Details in Tamil
இன்றைய கால கட்டத்தில் அனைவரிடமும் எதிர்காலத்திற்காக சேமிப்பது பற்றிய விழிப்புணர்வு அதிகமாகவே உள்ளது. ஆனால் எந்த திட்டத்தை பயன்படுத்தி சேமிப்பது என்பதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அரசின் சேமிப்பு திட்டம் பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம்.
ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் போஸ்ட் ஆபீஸ் Joint Life Assurance பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள விவரங்களை நன்கு புரிந்து கொண்டு இந்த சேமிப்பு திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதில் சேமித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக்கொள்ளவும்=> என்னது போஸ்ட் ஆபீஸில் இப்படி ஒரு அருமையான திட்டம் இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!
Joint Life Assurance (Yugal Suraksha) in Tamil:
இந்த பாலிசியை Yugal Suraksha என்றும் அழைப்பார்கள். இந்த பாலிசியில் எடுப்பதன் மூலம் உங்கள் வாழ்நாள் முழுவதும் பயன் பெறலாம். இது ஒரு முதலீட்டு மற்றும் ஆயுள் காப்பீட்டு கொள்கை ஆகும்.
இது ஓரு கூட்டு ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். இதில் கணவன் மனைவி இருவரும் இணைந்தே பாலிசி எடுத்து கொள்ள முடியும். அதில் குறிப்பாக மனைவி பிஎல்ஐ பாலிசிகளுக்கு தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
இந்த பாலிசியில் 21 -45 வயது வரை உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.
நன்மைகள்:
இந்த பாலிசி மூலம் கணவன் மனைவி இருவருக்கும் போனஸ் மற்றும் உறுதிபடுத்தப்பட்ட தொகை கிடைக்கும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 20,000 ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரையில் உறுதிபடுத்தப்பட்ட தொகை கிடைக்கும்.
இதையும் தெரிந்துக்கொள்ளவும்=> போஸ்ட் ஆபீஸின் அசத்தலான ஆயுள் காப்பீடு திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இந்த பாலிசி போட்ட மூன்று வருடத்திற்கு பிறகு லோன் வாங்கி கொள்ள முடியும்.
இந்த Joint Life Assurance (Suraksha) பாலிசியில் நீங்கள் எடுத்திருக்கும் காப்பீட்டு தொகையில் இருந்து ஒவ்வொரு 1000 ரூபாய்க்கு 52 ரூபாய் போனஸ் வழங்குகிறார்கள்.
உதாரணத்திற்கு நீங்கள் 1,00,000/- ரூபாய்க்கு காப்பீடு எடுத்திருந்தால் வருடம் வருடம் உங்களுக்கு 5,200/- ரூபாய் போனஸ் வழங்குவார்கள்.
நீங்கள் அல்லது உங்களின் மனைவி 80 வயதை அடையும் போது முதிர்வு தொகை (உறுதிப்படுத்தப்பட்ட தொகை மற்றும் திரட்டப்பட்ட போனஸ் தொகை) உங்களுக்கு வழங்கப்படும்.
இதையும் தெரிந்துக்கொள்ளவும்=> போஸ்ட் ஆபிஸில் 4,800 ரூபாய் வரை Bonus தரும் அசத்தலான திட்டம்..! இன்றே சேர்ந்திடுங்கள்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |