1 லட்சம் முதலீட்டிற்கு 2 லட்சம் வருமானம் தரும் அருமையான சேமிப்பு திட்டம்..!

Advertisement

1 லட்சம் முதலீட்டிற்கு 2 லட்சம் வருமானம் தரும் அருமையான சேமிப்பு திட்டம்..! Post Office Kisan Vikas Pathiram Scheme Tamil..!

நம்பிக்கையுடன் முதலீடு செய்வதற்கு அஞ்சலகத்தில் நிறைய சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் கிசான் விகாசு பத்திரம் (Kisan Vikas Patra). இந்த கிசான் விகாசு பத்திரம் என்பது ஒரு சேமிப்பு சான்றிதழ் திட்டமாகும். இது 1988-ஆம் ஆண்டில் இந்தியா அஞ்சல் துறையில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் நாம் ஒருமுறை ஒரு தொகையை முதலீடு செய்யும் போது, அதனுடைய முதிர்வு காலத்தில் இரண்டு மடங்கு லாபத்தை பெறமுடியும். சரி இந்த சேமிப்பு திட்டத்தில் யார் எல்லாம் பயன்பெறலாம், இந்த திட்டத்திற்கான தகுதி என்ன, எப்படி இந்த திட்டத்தில் முதலீடு செய்வது, எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் போன்ற தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

கிசான் விகாசு பத்திரத்தின் சிறப்பம்சம் – Post Office Kisan Vikas Pathiram Scheme Tamil:Kisan Vikas Patra

இது ஒரு சேமிப்பு சான்றிதழ் ஆகும். இந்த திட்டத்தை Government of India செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் 1 லட்சம் முதலீடு செய்தால் 2 லட்சம் வருமானம் கிடைக்கும், 5 லட்சம் முதலீடு செய்தால் 10 லட்சம் வருமானம் கிடைக்கும். அதாவது நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு தகுந்தது போல் இரண்டு மடங்கு வருமானம் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் வழங்கப்படும் சான்றிதழை பயன்படுத்தி நீங்கள் வங்கிகளில் கடன் பெறலாம்.

யாரெல்லாம் இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்:

18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவருமே இந்த திட்டத்தில் இணைய தகுதியுடையவர்கள்.

மைனர் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் அல்லது குழந்தையின் உரிமையாளர்கள் இந்த சேமிப்பு சான்றிதழை வாங்கலாம்.

Joint Account-ஆக இந்த சேமிப்பு பத்திரம் சான்றிதழை 3 நபர்கள் இணைத்து வாங்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் Rs.1,51,450/- வட்டியாக பெறலாம் அருமையான முதலீட்டு திட்டம்..!

எப்படி இந்த திட்டத்தில் இணைவது?

உங்கள் ஊரில் அருகாமையில் இருக்கும் போஸ்ட் ஆபிஸ் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு சென்று இந்த சேமிப்பு பத்திரம் குறித்த விவரங்களை கூறி இந்த திட்டத்தில் இணையலாம்.

இந்த ஸ்கீமில் இணைவதற்கு எந்தவிதமான Saving Account-ம் தேவை இல்லை. இருப்பினும் இந்த ஸ்கீமின் மெச்சூரிட்டி அமௌண்ட்டை பெறுவதற்கு கண்டிப்பாக உங்களிடம் ஒரு Saving Account தேவைப்படும். அந்த Saving Account-யில் தான் உங்களுடைய மெச்சூரிட்டி அமௌண்ட்டை போடுவார்கள்.

டெபாசிட் லிமிட்:

நீங்கள் இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1,000/-  ரூபாய் ஆகும். அதுவே அதிகபட்ச தொகை என்றால் உங்களால் எவ்வளவு தொகை முதலீடு செய்ய முடியுமோ அவ்வளவு தொகையை முதலீடு செய்யலாம்.

மெச்சூரிட்டி காலம்:

இந்த திட்டத்தின் மெச்சூரிட்டி பீரியட் எவ்வளவு என்றால் 10 ஆண்டுகள் ஆகும். அதாவது 120 மாதங்கள் ஆகும். நீங்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்தீர்களோ அந்த தொகைக்கான இரண்டு மடங்கு வருமானத்தை உங்கள் மெச்சூரிட்டி காலமான 10 ஆண்டுகள் முடிந்த பிறகு மீண்டும் பெறுவீர்கள்.

வட்டி:

இந்த சேமிப்பு பத்திரம் திட்டத்திற்க்கான வட்டி விகிதம் தற்பொழுது 7.2% வழங்கப்டுகிறது. நீங்கள் இந்த திட்டத்தில் இணையும் போது உங்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்பட்டது. அதே வட்டி விகிதத்தை தான் உங்களுடைய மெச்சூரிட்டி காலமான அந்த 10 வருடமும் வழங்குவார்கள்.

KVP சான்றிதழ்:

இந்த திட்டத்தில் இணைத்த பிறகு உங்களுக்கு இரண்டு வகையில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அவை இதோ..

  • E – Mode 
  • Pass Book – Mode 

இவற்றில் நீங்கள் E Mode-ஐ தேர்வு செய்தால் உங்களிடம் கண்டிப்பாக Saving Account இருக்கவேண்டும். அதுவே Pass Book Mode-ஐ தேர்வு செய்தால் ஒரு Saving Account-க்கு வழங்கப்படும் Pass Book மாதிரியே இந்த திட்டத்திற்கும் ஒரு Pass Book வழங்கப்படும். ஒரு முறை நீங்கள் இந்த Pass Book Mode-யில் Pass Book வாங்கிய பிறகு, நீங்கள் விரும்பும் பட்சத்தில் நீங்கள் E – Mode-ற்கு உங்களுக்கு வழங்கப்ட்ட Pass Book-ஐ மாற்றி கொள்ளலாம். இந்த ஸ்கீமினுடைய பாஸ் புக்கை நீங்கள் தொலைத்துவிட்டால், நீங்கள் டூப்ளிகேட் பாஸ் புக் அப்ளை செய்து வாங்கிக்கொள்ள முடியும். இரும்பும் அதற்கு அபராதமும் உண்டு.

Pre-mature Closure:

இந்த திட்டத்தில் Join செய்தப்பிற்கு இடைப்பட்ட காலங்களில் இந்த திட்டத்தை குளோஸ் செய்ய வேண்டும் என்றால் அதற்கான ஆப்ஷனை வழங்குகின்றன. இருப்பினும் அதற்கும் சில விதிமுறைகள் இருக்கிறது. அதாவது இந்த திட்டத்தில் இந்த 30 மாதங்களுக்கு பிறகு தான் உங்கள் அக்கவுண்ட்டை குளோஸ் செய்ய முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 ஆண்டில் 7 லட்சம் வரை லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்..!

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்:

Post Office Kisan Vikas Pathiram Scheme Tamil
முதலீடு தொகை வட்டி மெச்சூரிட்டி அமௌன்ட்
1,00,000/- 1,00,000/- 2,00,000/-
2,00,000/- 2,00,000/- 4,00,000/-
5,00,000/- 5,00,000/- 10,00,000/-
10,00,000/- 10,00,000/- 20,00,000/-
20,00,000/- 20,00,000/- 40,00,000/-

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement