Post Office Kisan Vikas Patra Scheme 2023
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்கும் 18 வயது நிரப்பியவுடன் வாழ்க்கையினை பற்றிய சிந்திப்பானது அந்த மனிதனுக்கோ அல்லது அப்பா அம்மாவிற்கோ அதிகமாக இருக்கக்கூடும். இவ்வாறு வாழ்க்கையினை பற்றி சிந்தித்த உடன் அனைவரும் ஏதோ திட்டத்தில் குறிப்பிட்ட தொகையினை சேமிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த வகையில் நாம் சேமிக்கும் தொகையினை இரு மடங்காக குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு நமக்கு அளிக்கக்கூடிய ஒரு சேமிப்பு திட்டத்தை பற்றி தான் இன்று பார்க்க போகிறோம். அதனால் அது என்ன திட்டம் அதில் எவ்வாறு சேமிப்பது என இதுபோன்ற விவரங்களை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கிசான் விகாஸ் சேமிப்பு திட்டம்:
18 வயது நிரம்பிய ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் இந்த கிசான் விகாஸ் திட்டத்தில் உங்களுடைய ஊரில் இருக்கும் போஸ்ட் ஆபீசில் இந்த திட்டத்தினை சேமிக்க தொடங்கலாம். மேலும் மைனர் குழந்தையின் பெயரில் அவரது பெற்றோர் சேமிக்கலாம்.
இந்த சேமிப்பு சிறப்பு என்னவென்றால் நாம் சேமிக்கும் தொகையினை 2 மடங்காக திருப்பிக் கொடுக்கும்.
சேமிப்பு தொகை:
இத்தகைய திட்டத்திற்கான குறைந்தப்பட்ச சேமிப்பு தொகை 1,000 ரூபாய் ஆகும். மேலும் அதிகப்பட்ச தொகையாக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் செலுத்தலாம்.
மாதம் 1000 ரூபாய் செலுத்தி 3 லட்சம் பெரும் ஆண் குழந்தைகளுக்கான தபால் துறை சேமிப்பு திட்டம்
வட்டி விகிதம்:
கிசான் விகாஸ் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதமாக தற்போது 7.50% வழங்கப்படுகிறது.
சேமிக்கும் விதம்:
நீங்கள் சேமிக்கும் தொகையானது 1,000 ரூபாய் முதல் எவ்வளவாக இருந்தாலும் அதனை ஒற்றை பிரிமீயமாக மட்டுமே செலுத்த வேண்டும். அதாவது இத்தகைய திட்டத்தில் சேமிக்கும் போதே உங்களுக்கான தொகையினை செலுத்தி விட வேண்டும்.
முதிர்வு காலம்:
தபால் துறையில் உள்ள இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 9 வருடம் 7 மாதம் ஆகும்.
Kisan Vikas Patra Calculator Post Office:
முதிர்வு காலம் | சேமிக்கும் தொகை | வட்டி தொகை | அசல் தொகை |
9 வருடம் 7 மாதம் | 1000 ரூபாய் | 1000 ரூபாய் | 2000 ரூபாய் |
2000 ரூபாய் | 2000 ரூபாய் | 4000 ரூபாய் | |
50,000 ரூபாய் | 50,000 ரூபாய் | 1,00,000 ரூபாய் | |
5,00,000 ரூபாய் | 5,00,000 ரூபாய் | 10,00,000 ரூபாய் |
மூன்று மாதத்திற்கு ஒரு முறை 61,500 ரூபாய் வருமானம் தரும் தபால் துறை திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |