Post Office Life Insurance Scheme in Tamil
வணக்கம் நண்பர்களே..! நமக்கு உதவும் வகையில் நிறைய திட்டங்கள் அஞ்சல் துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய திட்டத்தின் மூலம் நாம் நிறைய பயன் அடைந்து இருக்கின்றோம். செல்வமகள் திட்டத்தினை தொடர்ந்து அந்த வகையில் இன்றைய பதிவில் அஞ்சல் துறையில் அறிமுகம் செய்துள்ள ஆயுள் காப்பீடு திட்டத்தினை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் பதிவை முழுவதுமாக படித்து இத்திட்டத்தினை தெரிந்துக்கொள்வோம்.
இதையும் படியுங்கள்⇒ செல்வமகள் சேமிப்பு திட்டம் விதிமுறை..!
ஆயுள் காப்பீடு திட்டம்:
இந்த ஆயுள் காப்பீடு திட்டமானது 399 ரூபாயில் இருந்து தொடங்கப்படுகிறது. அஞ்சல் துறையில் 399 ரூபாயில் 10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு திட்டம் அறிமுகமாகி உள்ளது. வருடத்திற்கு ஒரு முறை நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் 399 ரூபாய் செலுத்த வேண்டும்.
விபத்து காப்பீடு திட்டமானது விபத்தில் உடல் முழுவதும் காயம் அடைந்தாலோ அல்லது மரணம் அடைந்தாலோ அல்லது விபத்தினால் பக்கவாதம் ஏற்பட்டாலோ 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
தகுதி:
அஞ்சல் துறையில் அறிமுகபடுத்திய விபத்து காப்பீடு திட்டத்தில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் மட்டும் இத்திட்டத்தில் சேர முடியும்.
இந்த திட்டத்தினை உங்களுடைய ஊரில் இருக்கும் அஞ்சலகத்திற்கு சென்று உங்களுடைய ஆதார் அட்டையின் மூலம் 399 ரூபாய் செலுத்தி தொடங்கிக்கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்⇒ அஞ்சல் துறையின் தொடர் வைப்பு நிதி திட்டம்..! Recurring Deposit In Post Office..!
மேலும் இது போன்ற சேமிப்பு திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் 👉👉👉 | Schemes |