போஸ்ட் ஆபீஸில் 2,31,125 ரூபாய் வரை பெறக்கூடிய பெண்களுக்கான புதிய சேமிப்பு திட்டம்..!

Advertisement

பெண்களுக்கான சேமிப்பு திட்டம்

இன்றைய காலத்தை பொறுத்தவரை ஆண்களை போலவே பெண்களும் சம உரிமை பெற்று வருகிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் பெண்கள் பெரும்பாலும் அனைத்திலும் முன்னிரிமை பெற்று வருகிறார்கள். அதோடுமட்டும் இல்லாமல் பெண்கள் தனியாக வேலைக்கும் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். அப்படி அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியினை அவருடைய பெயரீல் அல்லது குழந்தையின் பெயரில் சேமிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து பெண்களுக்கு என்று நிறைய திட்டங்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் பெரும்பாலான பெண் குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள். இதனை தொடர்ந்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான மற்றொரு அருமையான திட்டம் அறிமுகம் ஆகியுள்ளது. அதில் இப்போது சில அப்டேட்டும் உள்ளது. அதனால் இந்த திட்டத்தினை பற்றிய முழு விவரங்களையும்  விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Post Office Mahila Samman Scheme 2023:

போஸ்ட் ஆபீஸில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என்று Mahila Samman Scheme என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் முற்றிலும் பெண்களுக்கான திட்டம் என்பது குடிப்பிடத்தக்கது.

இத்தகைய திட்டம் ஆனது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் போஸ்ட் ஆபீஸில் அமுலுக்கு வந்தது. ஆனால் இது எத்தனை வருடம் வரை நீட்டிக்கப்படும் என்ற அறிவிப்பினை அறிவிக்கவில்லை.

ஆனால் இப்போது அதற்கான அறிவிப்பும் வந்துள்ளது. அதாவது இத்தகைய Mahila Samman Scheme ஆனது 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்ற தெவிக்கப்பட்டள்ளது. 

முதலீடு தொகை:

இந்த ஸ்கீமிற்கான குறைந்தபட்ச தொகை 1,000 ரூபாய்  மற்றும் அதிகபட்ச தொகை என்றால் அது 2 லட்சம் ரூபாய் ஆகும். மேலும் நீங்கள் டெபாசிட் செய்யும் தொகையினை ஒரே ஒரு பிரீமியமாக செலுத்த வேண்டும்.

தகுதி:

இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களும் போஸ்ட் ஆபீஸில் இந்த ஸ்கீமின் கீழ் இனைந்து கொள்ளலாம்.

வட்டி விகிதம்:

போஸ்ட் ஆபீஸில் உள்ள இத்தகைய திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.5% என வழங்கப்பட்டு வருகிறது.

முதிர்வு காலம்:

தபால் துறையில் உள்ள இந்த மகிளா சம்மான் திட்டத்திற்கான முதிர்வு காலம் 2 வருடம் ஆகும். மேலும் இந்த கணக்கினை தொடங்கி முதிர்வு காலம் வருவதற்கு 6 மாதத்திற்கு முன்பாக வேண்டுமானாலும் முடித்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்👇
1000 ரூபாய் செலுத்தி மாதந்தோறும் 12,000 ரூபாய் வருமானம் பெறும் மத்திய அரசின் திட்டம்..

இத்திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு தோகை கிடைக்கும்:

போஸ்ட் ஆபீஸ் மகிளா சம்மான் ஸ்கீமில் நீங்கள் 2 லட்சம் ரூபாயினை முதலீடு செய்தால் 2 வருடத்திற்கு பின்பாக உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலீடு தொகை  முதிர்வு காலம்  1-வது வருடத்தின் வட்டி தொகை  2-வது வருடத்தின் வட்டி தொகை  மொத்த தொகை 
2 லட்சம் ரூபாய் 2 வருடம் 15,000 ரூபாய் 16,125 ரூபாய் 2,31,125 ரூபாய்

 

தபால் துறையில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தி வட்டி மட்டுமே 2,69,000 ரூபாய் பெறக்கூடிய அருமையான சேமிப்பு திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement