5 வருடத்திற்கு மாதந்தோறும் 1,183 ரூபாய் வருமானம் தரக்கூடிய அருமையான திட்டம்.!

Advertisement

Post Office Monthly Income Scheme 

இக்காலத்தில் சேமிக்க தொடங்கினால் தான் எதிர்காலத்தில் ஏற்படும் பணத்தேவையை பூர்த்தி செய்ய முடியும். எனவே இதனை கருத்தில் கொண்டு பெரும்பாலானோர் சேமிக்க தொடங்கியிருப்போம். இன்னும் சிலபேர் எதில் சேமிப்பது என்ற குழப்பத்துடன் இருப்பார்கள். ஏனென்றால் இப்போது, வங்கிகளிலும் சரி போஸ்ட் ஆபீஸுலும் சரி அதிகமான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இதனால் எதில் சேமிப்பது என்று பலபேர் யோசித்து கொண்டு இருப்பார்கள். எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் ஒவ்வொரு சேமிப்பு திட்டங்களின் விவரங்களையும் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டமான (MIS) திட்டம் பற்றிய விவரங்களை பற்றித்தான் பின்வருமாறு பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

What is Post Office Monthly Income Scheme 2023 in Tamil:

What is Post Office Monthly Income Scheme 2023 in Tamil

MIS என்றால் என்ன.?

போஸ்ட் ஆபீஸின் (MIS) மாத வருமானம் திட்டம் என்பது இந்திய அரசின் ஆதரவுடன் செயல்படக்கூடிய சிறு சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தில் முதலீட்டாளர்கள் டெபாசிட் செய்யும் தொகையினை பொறுத்து மாதம் மாதம் வட்டி தொகையினை பெறலாம்.

இத்திட்டத்தில், ஒரு நபர் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேமிப்பு கணக்கை தொடங்கி கொள்ளலாம்.

மாத வருமான திட்டத்தை தொடங்கிய ஒரு மாதத்திலிருந்து முதிர்வு காலம் வரை ஒவ்வொரு மாதமும் நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கான வருமானத்தை பெறலாம்.

இத்திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்யலாம்.?

போஸ்ட் ஆபீஸின் MIS திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

மேலும், இத்திட்டத்தில் ஒரு நபர் கணக்கை திறந்து இருந்தால் அதிகபட்சமாக 4,50,000 ரூபாயும் Joint Account ஆக இருந்தால் அதிகபட்சமாக Rs.9,00,000 ரூபாய் வரையும் முதலீடு செய்து கொள்ளலாம்.

1,00,000 செலுத்தினால் 1,00,000 ரூபாயை வட்டியாக அளிக்கும் திட்டம்

தகுதிகள்:

இத்திட்டத்தில் 10 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் முதலீடு செய்யலாம். இருப்பினும் மைனராக இருப்பவர்கள் தங்கள் பெற்றோரின் பெயரில் கணக்கை தொடங்கி கொள்ளலாம்.

MIS Post Office Scheme Interest Rate 2023:

போஸ்ட் ஆபீஸின் MIS திட்டத்திற்கு 7.1% என்ற அளவில் வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

முதிர்வு காலம்:

போஸ்ட் ஆபீஸின் MIS திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

இத்திட்டத்தில் சேர தேவையான ஆவணங்கள்:

  • வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்ற அடையாள சான்றுகள்
  • முகவரி சான்றுகள்
  • பாஸ்போர்ட் அளவுள்ள இரண்டு புகைப்படங்கள்

இத்திட்டத்தின் நன்மைகள்:

சேமிப்பு கணக்கை தனிநபராக திறந்த பிறகு கூட்டு கணக்காக மாற்றிக்கொள்ளலாம்.

கணக்கை ஒரு போஸ்ட் ஆபீசில் இருந்து மற்றொரு போஸ்ட் ஆபிஸிற்கு மாற்றிக்கொள்ளலாம்.

டெபாசிட் செய்த நபர் முதிர்வு காலத்திற்கு முன்பே இறந்துவிட்டால் கணக்கு மூடப்பட்டு அவரின் நாமினிக்கு தொகை வழங்கப்படும் அல்லது அவரது வாரிசுகளுக்கு வழங்கப்படும்.

மாதந்தோறும் 12,332 ரூபாய் வருமானம் தர கூடிய திட்டம்

இத்திட்டத்தில் 2 லட்சம் முதலீடு செய்தால் மாதம் எவ்வளவு வருமானம் பெறலாம்.?

முதலீடு தொகை  முதிர்வு காலம் வட்டி விகிதம்  மாத வருமானம்
2 லட்சம்  5 ஆண்டுகள்  7.1% 1,183 ரூபாய் 

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement