Post Office Monthly Income Scheme 2023 Tamil
பணத்தை சம்பாதிப்பதை விட சேமிப்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நாம் காலம் முழுவதும் உழைத்து கொண்டே இருக்க முடியாது. ஒரு 50 வயதிற்கு மேல் கட்டாயம் உடலிற்கு ஓய்வு தேவைப்படும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் 30 வயதில் சுறுசுறுப்பாக பார்த்திருப்பீர்கள். அதே சுறுசுறுப்புடன் 50 வயது வயது வரி பார்க்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. அதனால் எதிர்காலத்திற்காக பானத்தை சேமித்து வைப்பது முக்கியமான ஒன்றாகும். அதனால் தான் இந்த பதிவில் தபால் துறையில் மாதந்தோறும் வருமானம் தருகின்ற திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
தபால் துறை மாதந்தோறும் வருமானம் தரும் திட்டம்:
தகுதி:
18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.
டெபாசிட் தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாயும், அதிகபட்சம் 9 லட்சம் ரூபாய் வரைக்கும் டெபாசிட் செய்யலாம். அதுவே நீங்கள் ஜாயிண்ட் கணக்காக ஓபன் செய்தால் அதிகபட்சம் 15 லட்சம் வரைக்கும் டெபாசிட் செய்யலாம்.
இதில் நீங்கள் ஒரு முறை மட்டும் அதவாது கணக்கை திறக்கும் போது மட்டும் பணத்தை செலுத்தினாலே போதும்.
வட்டி விகிதம்:
போஸ்ட் ஆபீஸில் உள்ள இத்தகைய திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.40% ஆகும். இத்தகைய வட்டி விகிதமான 5 வருடம் வரை எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கும்.
நீங்கள் 5 வருடமும் மாதந்தோறும் 7.40% வட்டி தொகையினை பெற்று கொள்ளலாம்.
முதிர்வு காலம்:
போஸ்ட் ஆபீஸில் உள்ள Monthly Income Scheme-ற்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும்.
Premature closure:
நீங்கள் கணக்கை தொடங்கி 1 முதல் 3 வருடத்திற்குள் கணக்கை மூடினால் தொகையிலிருந்து 2% கழித்த பிறகு மீதம் உள்ள தொகை வழங்கப்படும்.
அதுவே 3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் கணக்கை மூடினால் தொகையிலிருந்து 1% கழித்த பிறகு மீதம் உள்ள தொகை வழங்கப்படும்.
Post Office Monthly Income Scheme 2023 | |||
சேமிப்பு தொகை | மாத வட்டி | மொத்த வட்டி தொகை | முதிர்வு கால தொகை |
1 லட்சம் | Rs. 617/- | Rs. 37,020/- | Rs. 1,37,020/- |
2 லட்சம் | Rs. 1233/- | Rs. 73,980/- | Rs. 2,73,980/- |
3 லட்சம் | Rs. 1850/- | Rs. 1,11,000/- | Rs. 4,11,000/- |
5 லட்சம் | Rs. 3,083/- | Rs. 1,85,000/- | Rs. 6,85000/- |
10 லட்சம் | Rs.6167/- | Rs. 3,70,020/- | Rs. 13,70,020/- |
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |