Post Office Monthly Income Scheme in Tamil
தபால் துறையில் அனைவரும் பயன்படும் வகையில் நிறைய திட்டங்கள் உள்ளது. இந்த திட்டங்கள் பெரும்பாலானவர்கள் சேர்ந்து பயன் அடைகிறார்கள். சில நபர்களுக்கு தபால் துறையில் என்னென்ன திட்டங்கள் உள்ளது, மற்றும் அந்த திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்றெல்லாம் தெரியவில்லை. அவர்களுக்காக தான் நமது பத்வில் தினந்தோறும் தபால் துறையில் உள்ள திட்டங்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Post Office Monthly Income S Scheme பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வோம் வாங்க..
Post Office Monthly Income Scheme in Tamil:
தகுதி:
18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.
இதை நீங்கள் சிங்கிள் கணக்காகவும் தொடங்கலாம், ஜாயிண்ட் கணக்காகவும் தொடங்கலாம்.
செலுத்த வேண்டிய தொகை:
குறைந்தபட்சம் தொகை 1000 ரூபாயும், அதிகபட்சம் 4.5 லட்சம் வரையும் செலுத்தலாம். அதுவே ஜாயிண்ட் கணக்காக தொடங்கினால் 9 லட்சம் வரையும் டெபாசிட் செய்யலாம்.
தபால் துறையில் மாதந்தோறும் 500 ரூபாய் சேமித்தால் 39,44,600 ரூபாய் பெறும் திட்டம்
முதிர்வு காலம்:
இந்த திட்டத்தில் கால அளவு 5 வருடம்.
வட்டி:
இந்த திட்டத்திற்கான வட்டியாக 7.1% வழங்குகிறார்கள். இந்த கணக்கை தொடங்கும் போது எவ்வளவு வட்டியோ அதே தான் 5 வருடமம் இருக்கும்.
Premature Closure:
இந்த கணக்கை ஓபன் செய்து திட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் கணக்கை முடித்து கொள்ளலாம். கணக்கை ஓபன் செய்து 1 வருடத்திற்கு பிறகு தான் முடிக்க முடியும்.
இந்த கணக்கை 3 வருடத்தில் CLOSE செய்கிறீர்கள் என்றால் டெபாசிட் தொகையிலுருந்து 2% கழித்து விட்டு தான் வழங்குவார்கள்.
அதுவே 3 வருடதிற்கு பிறகு CLOSE செய்கிறீர்கள் என்றால் டெபாசிட் தொகையிலிருந்து 1% கழித்து விட்டு தான் வழங்குவார்கள்.
இந்த திட்டத்தில் இணைவதால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்:
டெபாசிட் தொகை | மாத வட்டி | 5 வருடத்தில் வட்டி | மொத்தமாக கிடைக்கும் தொகை |
Rs.50,000/- | Rs.295/- | Rs.17,750/- | Rs.67,750/- |
Rs.1,00,000/ | Rs.591/- | Rs.35,500/- | Rs.1,35,500/- |
Rs.2,00,000/- | Rs.1183/- | Rs.71,000/- | Rs.2,71,000/- |
Rs.4,50,000/- | Rs.2662/- | Rs.1,59,750/- | Rs.6,09,750/- |
Rs.9,00,000/- | Rs.5325/- | Rs.3,19,500/- | Rs.12,19,500/- |
33,000 ரூபாய் வரை லாபம் தரும் தபால் துறையின் அருமையான திட்டம்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |