Post Office MIS Scheme Details in Tamil
இன்றைய காலத்தில் பணத்தை சம்பாதிப்பதை விட அதனை சரியானவற்றில் சேமிப்பது ரொம்ப முக்கியமானது. ஏனென்றால் நாளுக்கு விலைவாசி என்பது ஏறிக்கொண்டே தான் இருக்கிறது. அதனால் நீங்கள் இப்பொது சம்பாதிக்கின்ற பணத்தை சிறிதாவது சேமித்து வைப்பது அவசியமானது. அதிலும் பல நபருக்கு சேமிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது ஆனால் எதில் சேமிப்பது என்று தான் தெரியவில்லை. அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் சேமிப்பு பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தபால் துறையில் வருமானம் தர கூடிய திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
தபால் துறை வருமானம் தர கூடிய திட்டம்:
தகுதி:
இந்த திட்டடத்தில் இந்திய குடிமக்கள் அனைவரும் பயன் அடையலாம்.
வட்டி:
இந்த திட்டத்தில் வட்டியானது 7.4% வழங்கப்படுகிறது.
டெபாசிட் தொகை:
தபால் துறை MIS திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயும், அதிகபட்சம் 9 லட்சம் வரையும் டெபாசிட் செய்யலாம்.
டெபாசிட் காலம்:
இந்த திட்டத்தில் டெபாசிட் காலமானது 5 வருடம் கொடுக்கப்படுகிறது.
விதிமுறைகள்:
நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து சேமித்து கொண்டிருக்கும் போது திடீரென கணக்கை முடித்துக்கொள்ள விரும்பினால் அதற்கான வசதி உள்ளது. 1 வருடம் முடிந்த பிறகு இந்த கணக்கை முடித்து கொள்ளலாம்.
அதேபோல நீங்கள் மட்டும் தனியாக இந்த திட்டத்தின் கீழ் சேமித்து கொண்டிருக்கும் போது திடீரென இந்த கணக்கை நீங்கள் மூன்று நபர்கள் கூடிய கூட்டு கணக்காகவும் மாற்றி கொள்ளலாம்.
2 வருடம்:
2 வருடம் முடிந்த பிறகு நீங்கள் இந்த கணக்கை முடிக்க வேண்டும் என்றால் உங்களுடைய சேமிப்பு தொகையில் இருந்து 2% கூடிய குறிப்பிட்ட தொகை பிடிக்கப்பட்டு மீதம் உள்ள தொகை மட்டும் வழங்கப்படும்.
3 வருடம்:
அதே நீங்கள் 3 வருடம் முடிந்த பிறகு இந்த கணக்கை முடிக்க வேண்டும் என்றால் உங்களுடைய சேமிப்பு தொகையில் இருந்து 1% கூடிய குறிப்பிட்ட தொகை பிடிக்கப்பட்டு மீதம் உள்ள தொகை மட்டும் வழங்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் ரூ.6000/- தரும் அருமையான அஞ்சலக சேமிப்பு திட்டம்..!
எவ்வளவு கிடைக்கும்:
Post Office Monthly Income Scheme 2023 | |||
சேமிப்பு தொகை | மாத வட்டி | மொத்த வட்டி தொகை | முதிர்வு கால தொகை |
Rs.10,000/- | Rs.62/- | Rs.3720/- | Rs.13,720/- |
Rs.20,000/- | Rs.123/- | Rs.7380/- | Rs.27380/- |
Rs.30,000/- | Rs.185/- | Rs.11,100/- | Rs.41100/- |
Rs.40,000/- | Rs.247/- | Rs.14,820/- | Rs.54820/- |
Rs.50,000/- | Rs.308/- | Rs.18,480/- | Rs.68480/- |
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |