மாதம் 4950 ரூபாய் வருமானம் தரும் Post Office சேமிப்பு திட்டம்

Advertisement

Post Office Monthly Investment Scheme in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. மாதம் மாதம் 4950 ரூபாய் வருமானம் தரும் ஒரு அருமையான சேமிப்பு திட்டத்தை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம். அதாவது மாதம் மாதம் ஒருவர் வேலைக்கு சென்று சம்பளம் வாங்குவது போல் இந்த திட்டத்தில் மாதம் மாதம் வருமானம் கிடைக்கும். அது என்ன திட்டம் பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம். சரி இந்த திட்டத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும், எவ்வளவு வட்டி கிடைக்கும், யாரெல்லாம் இந்த திட்டத்தில் பயன்பறலாம், தகுதி என்ன என்பதை பற்றி இன்றைய பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
10 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

திட்டம்:

இந்த திட்டத்தின் பெயர் Post Office Monthly Income Scheme ஆகும். அதாவது மாத வருமான திட்டம் ஆகும். இந்த திட்டம் அஞ்சல் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் நாம் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

தகுதி:

இந்திய குடியுரிமை பெற்ற அனைவருமே இந்த திட்டத்தில் இணைத்து பயன்பெறலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபீஸ் மற்றும் SBI மாத வருமான திட்டத்தில் எது சிறந்தது எதில் அதிக லாபம் பெறலாம்

வயது தகுதி:

குறைந்தபட்சம் 10 வயதிற்கு மேற்பட்ட அனைவருமே இந்த திட்டத்தில் பயன் பெறலாம். 10 வயதிற்கு கீழ் இருப்பவர்களும், உடல் நலத்தில் ஊனமோ அல்லது மாற்றுத்திறனாளிகளோ இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். அதாவது Guardian மூலம். பயன்பெற முடியும்.

எவ்வளவு வட்டி கிடைக்கும்:

அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் வருடத்திற்கு வருடம் வட்டி விகுதத்தில் மாற்றம் ஏற்படும். ஆக எந்த தேதியில் இந்த திட்டத்தில் இணைய உள்ளீர்களோ அந்த தேதியில் வட்டி விகிதத்தை மட்டும் ஒரு முறை அஞ்சல் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரி பார்த்துக்கொள்ளவும். இந்த ஆண்டுக்கான வட்டி எவ்வளவு என்றால் 7​.1​% என்ற விகுதத்தில் உள்ளது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:

உங்களிடம் 1000 ரூபாய் இருந்தாலே போதும் உங்கள் ஊரில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று இந்த மாத வருமான திட்டத்தின் விவரங்களை கேட்டு இணையலாம். நீங்கள் இந்த திட்டத்தில் Single Account மற்றும் Joint Account-ம் கிரியேட் செய்யலாம். Joint Account-ஆக இருந்தால் 3 நபர் இணைத்தும் அக்கௌன்ட் கிரியேட் செய்துகொள்ளலாம்.

எவ்வளவு முதலீடு செய்யலாம்:

இந்த திட்டத்தில் நீங்கள் அதிகட்சம் 4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். Joint Account-ஆக இருந்தால் 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 ஆண்டில் 14 லட்சம் லாபம் தரும் சேமிப்பு திட்டம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement