தபால் துறையில் 5 வருடத்தில் 14,00,000 ரூபாய் வரை லாபம் தரும் அருமையான சேமிப்பு திட்டமா..?

Advertisement

Post Office National Saving Certificate Scheme Details in Tamil

பொதுவாக இன்றைய கால கட்டத்தில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகி விட்டது. ஆம் நண்பர்களே இன்றைய கால கட்டத்தில் உள்ள பணத்தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமில்லாமல் எதிர்காலத்திற்காக சேமித்து வைப்பது மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது. அதனால் அனைவருமே  எதிர்கால வாழ்க்கைக்காக சேமிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

பணத்தை சேமிப்பதற்கு பல வழிகள் உள்ளது. ஆனால் எந்த சேமிப்பு முறையை தேர்வு செய்வதில் தான் குழப்பம் உள்ளது. அதனால் தான் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு சேமிப்பு திட்டத்தை பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் தபால் துறை தேசிய சேமிப்பு பத்திர திட்டம் பற்றிய முழு விவரங்களையும் அதாவது இத்திட்டத்தின் வட்டி விகிதம், தகுதியுடையவர்கள், லாபம் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> தினமும் 100 ரூபாய் சேமித்தால் 10,00,000 ரூபாய் வரை லாபம் தரும் அருமையான திட்டம்..!

Post Office National Saving Certificate Scheme in Tamil:

 

Post Office National Saving Certificate Scheme in Tamil

தேசிய சேமிப்பு சான்றிதழ் என்பது ஒரு நிலையான வருமான முதலீட்டுத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தினை நீங்கள் எந்த ஒரு போஸ்ட் ஆஃபீஸிலும் திறக்கலாம்.

அதாவது இந்த திட்டத்தில் குறிப்பிட்ட தொகையினை சேமித்து அஞ்சலகத்தில் சேமிப்பு பத்திரத்தினை வாங்கி 5 வருடத்திற்கு பிறகு பத்திரத்தினை திருப்பி அளிக்கும் போது செலுத்திய தொகை மற்றும் அதன் வட்டியுடன் கிடைக்கும்.

தகுதிகள்:

தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் சேருவதற்கு விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

இதில் ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கினை திறக்க முடியும்.

இந்த திட்டத்தை துவங்க வயது 18 ஆண்டுகள் முதல் இருக்கலாம். இந்த திட்டத்தில் ஜாயிண்ட் அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்ள முடியும்.

மைனர் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் மூலம் சேமிப்பு திட்டத்தினை ஓபன் செய்து கொள்ள முடியும்.

NRI இந்த திட்டத்தில் இணைய முடியாது.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 33,000 ரூபாய் வரை லாபம் தரும் தபால் துறையின் அருமையான திட்டம்

நன்மைகள்:

இது அரசு ஆதரவு திட்டமாகும் அதனால் செய்யும் முதலீடு மற்றும் வட்டிக்கு பாதுகாப்பு உண்டு.

இந்த திட்டத்தின் கால அளவானது 5 வருடங்கள் ஆகும். இதில் குறைந்தபட்சம் 1,000 முதல் அதிகபட்சம் எவ்வளவு ரூபாய் வேண்டுமென்றாலும் முதலீடு செய்து கொள்ள முடியும்.

இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 7% ஆகும். இந்த வட்டி விகிதமானது ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. அதனால் பொதுவாக வங்கி சேமிப்பிற்கு வழங்கப்படும் வட்டியை விட இதில் அதிகமான வட்டி கிடைக்கிறது.

மேலும் இந்த திட்டத்தில் கடனும் பெற்று கொள்ள முடியும். இந்த திட்டத்தில் நீங்கள் யாரை வேண்டுமென்றாலும் நாமினியாக நியமனம் செய்து கொள்ளலாம்.

லாபம்:

இந்த திட்டத்தில்  ஒருவர் 5,00,000 ரூபாய் முதலீடு செய்கிறார் என்றால் அவருக்கு 5 ஆண்டுகள் முடிவில் அவருக்கு 2,01,275 ரூபாய் வட்டியுடன் சேர்த்து 7,01,275 ரூபாய் கிடைக்கும்.    இதுவே ஒருவர் இந்த திட்டத்தில் 10,00,000 ரூபாய் முதலீடு செய்கிறார் என்றால் அவருக்கு 5 ஆண்டுகள் முடிவில் அவருக்கு 4,02,551 ரூபாய் வட்டியுடன் சேர்த்து 14,02,551 ரூபாய் கிடைக்கும்.  

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> மிஸ் பண்ணீடாதீங்க 400 நாட்களில் 50,000-திற்கு மேல் வட்டி கிடைக்கும் அருமையான இரண்டு திட்டங்கள்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

 

Advertisement