1 Lakh NSC Calculator in Tamil
சேமிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியம். இதனை கருத்தில் கொண்டு அனைவருமே சேமிக்க நினைப்போம். ஆனால் எங்கு சேமிப்பது..? எங்கு சேமித்தால் அதிக வட்டிதொகை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள நினைப்போம். இதனால் வங்கியில் உள்ள சேமிப்பு திட்டங்கள், போஸ்ட் ஆபீஸில் உள்ள சேமிப்பு திட்டங்கள் என அனைத்து திட்டங்களில் உள்ள வட்டி விகிதத்தை தெரிந்துக்கொள்வோம். எனவே நீங்கள் போஸ்ட் ஆபீஸில் உள்ள NSC சேமிப்பு திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Post Office NSC Scheme in Tamil:
போஸ்ட் ஆபீஸ் வழங்கும் சேமிப்பு திட்டங்களில் ஒன்றான NSC சேமிப்பு திட்டத்தை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.
இத்திட்டத்தில் நீங்கள் ஒருமுறை டெபாசிட் செய்தால் போதும். அதாவது இத்திட்டத்தில் நீங்கள் அக்கவுண்ட் ஓபன் செய்யும்போதும் மட்டும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
தகுதி:
18 வயது பூர்த்தி அடைந்த அனைத்து இந்திய குடிமக்களும் போஸ்ட் ஆபீஸ் NSC சேமிப்பு திட்டத்தில் சேர தகுதியானவர்கள். மேலும், மைனர் குழந்தைகளின் பெயரில் அவர்களின் பெற்றோர் இத்திட்டத்தில் அக்கவுண்ட் ஓபன் செய்யலாம்.
அதுமட்டுமில்லாமல், இத்திட்டத்தில் அதிகபட்சமாக மூன்று நபர்கள் சேர்த்து ஜாயிண்ட் அக்கவுண்ட் ஓபன் செய்யலாம்.
கால அளவு:
போஸ்ட் ஆபீஸ் NSC சேமிப்பு திட்டத்திற்கான கால அளவு 5 வருடம் ஆகும். அதாவது, நீங்கள் டெபாசிட் செய்த தொகையினை வட்டியுடன் சேர்த்து 5 வருடத்திற்கு பிறகு பெற்று கொள்ளலாம்.
டெபாசிட் தொகை:
இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகப்பட்சம் நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
வட்டி விகிதம்:
போஸ்ட் ஆபீஸ் NSC சேமிப்பு திட்டத்தில் 7.70% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
உதாரணமாக:
போஸ்ட் ஆபீஸ் NSC சேமிப்பு திட்டத்தில் 5 வருட கால அளவை தேர்வு செய்து நீங்கள் 1 லட்சம் டெபாசிட் செய்தால் உங்களுக்கு 7.70% வட்டி விகிதம் அளிக்கடப்படுகிறது.
எனவே இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும்போது, 5 வருடத்தில் மொத்த வட்டித்தொகையாக 44,903 ரூபாய் பெறலாம்.
ஆகவே, நீங்கள் நீங்கள் செலுத்திய 1 லட்சம் மற்றும் அதற்கான வட்டித்தொகையை சேர்த்து மொத்தமாக 1,44,903 ரூபாய் தொகையை நீங்கள் பெறலாம்.
2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |