Post Office NSC Scheme 2023
பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் சேமிக்க வேண்டும் என்ற ஆசை மற்றும் ஆர்வம் இருக்கும். ஆனால் இதில் சேமிப்பது என்றும் எவ்வளவு பணத்தை சேமிப்பதும் என்ற குழப்பம் இருக்கும். ஏனென்றால் எந்த ஒரு திட்டத்திலும் நாம் முதல் முதலில் சேமிக்க தொடங்கும் போது நிறைய குழப்பங்கள் மற்றும் தடுமாற்றம் இருக்கும். அதுவே அத்தகைய திட்டம் பற்றி நமக்கு முழு தகவல்களும் தெரிந்து இருந்தால் சேமிப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். அதனால் இன்று போஸ்ட் ஆபீசில் உள்ள NSC திட்டத்திற்கான முழு தகவலையும் அதில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற விவரங்களையும் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் பதிவை முழுவதுமாக படித்து பயன்பெறலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl
National Savings Certificate Scheme in Post Office:
இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்:
போஸ்ட் ஆபீசில் உள்ள இந்த தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் 18-வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் சேமிப்பை தொடங்கலாம்.
டெபாசிட் தொகை:
இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச முதலீடு தொகை 1,000 ரூபாய் மற்றும் அதிகபட்ச தொகையாக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
வட்டி விகிதம்:
தபால் துறையில் உள்ள இத்தகைய திட்டத்திற்கான வட்டி தொகையாக 7.70% வரை அளிக்கப்படுகிறது. இதில் ஆரம்பத்தில் அளிக்கப்படும் சேமிப்பு தொகையானது எந்த விதமான மாற்றமும் இல்லாமல் 5 வருடமும் அதே வட்டி தொகை வழங்கப்டுகிறது.
New Scheme👇👇 444 நாட்களில் Rs.5,51,110/- பெறலாம் இப்படி ஒரு திட்டமா
முதிர்வு காலம்:
தேசிய சேமிப்பு பத்திரம் திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும். மேலும் இந்த திட்டத்தை பயன்படுத்தி நீங்கள் லோன் பெரும் வசதியும் உள்ளது.
இத்திட்டத்தில் முதலீட்டிற்கான தொகை:
போஸ்ட் ஆபீஸில் உள்ள இந்த திட்டத்தில் நீங்கள் 1000 ரூபாய் முதல் அல்லது அதற்கு மேலும் முதலீடு செய்தால் 5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதிர்வு காலம் | டெபாசிட் தொகை | மொத்த வட்டி தொகை | முதிர்வு கால தொகை |
5 வருடம் | Rs. 1,000 | Rs. 449 | Rs. 1,449 |
Rs. 5,000 | Rs. 2,245 | Rs. 7,245 | |
Rs. 10,000 | Rs. 4,490 | Rs. 14,490 | |
Rs. 50,000 | Rs. 22,451 | Rs. 72,451 | |
Rs. 1,00,000 | Rs. 44,903 | Rs. 1,44,903 | |
Rs. 5,00,000 | Rs. 2,24,517 | Rs. 7,24,517 | |
Rs. 10,00,000 | Rs. 4,49,034 | Rs. 14,49,034 |
New Scheme👇👇 2 வருடத்தில் 1,74,033 ரூபாய் பெறலாம்.. அதுவும் நம்ம போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |