100 ரூபாய் சேமித்தால் 12 லட்சம் தபால் துறையின் திட்டம்
மனிதனின் வாழ்க்கையில் சேமிப்பு என்பது ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் நாம் வாழ்நாள் முழுவதும் வேலை பார்த்து கொண்டே இருக்க முடியாது. 55 வயதிற்கு மேல் மனிதனுக்கு ஓய்வு தேவைப்படும். அதனால் அப்போது நாம் உட்கார்ந்து சாப்பிட வேண்டுமென்றால் இப்போது சம்பாதிக்கின்ற பணத்தை சேமித்து வைக்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் தபால் துறையில் உள்ள PPF திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
PPF Scheme in tamil:
PPF (Public Provident Fund) அல்லது பொது வருங்கால வைப்பு நிதி என்பது இந்திய அரசு வழங்கும் சேமிப்பு திட்டமாகும். நிரந்தர வேலை செய்பவர்களுக்கு எப்படி PF போன்ற திட்டங்கள் உள்ளதோ அதே போல் தனிநபர்கள் பயன் பெற இந்திய அரசு இந்த PPF திட்டத்தினை கொண்டுள்ளது.
PPF கணக்குகளை தபால் நிலையங்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் முக்கிய தனியார் வங்கிகள் ஆகியவற்றிலும் திறக்கலாம்.
தபால் துறையில் 1000 ரூபாய் சேமித்தால் 5 வருடத்தில் Rs. 7,34,664 ரூபாய் கிடைக்கும்..
தகுதி:
இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.
மேலும் இந்த திட்டத்தில் ஒரு நபர் ஒரு கணக்கை மட்டும் தான் திறக்க முடியும்.
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- முகவரி அட்டை
அதுவே குழந்தையின் பெயரில் கணக்கை திறக்கிறீர்கள் என்றால் Birth certificate கொடுக்க வேண்டியிருக்கும்.
5 ஆண்டில் Rs. 9,59,000/- பெறக்கூடிய அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம்..!
டெபாசிட் தொகை:
இந்த திடட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 500 ரூபாயும், அதிகபட்சம் ஒரு ஆண்டில் 1,50,000 ரூபாய் வரைக்கும் டெபாசிட் செய்யலாம்.
வட்டி:
இந்த திட்டத்திற்கான வட்டியாக தற்போது 7.10% வழங்குகிறார்கள்.
டெபாசிட் காலம்:
இந்த திட்டத்திற்கான டெபாசிட் காலமாக 15 வருடம் வழங்கப்படுகிறது.
நீங்கள் 15 வருடத்திற்கு பிறகும் சேமிப்பை நீட்டித்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதில் இரண்டு விதமான ஆப்ஷனை வழங்குவார்கள். With டெபாசிட் வித் அவுட் டெபாசிட் என்று இருக்குக். அதில் வித் டெபாசிட்டை செலக்ட் செய்தால் 5 வருடத்திற்கு நீங்கள் பணத்தை சேமிக்க வேண்டும். அதுவே நீங்கள் வித் அவுட் டெபாசிட்டை செலக்ட் செய்தால் 5 வருடத்திற்கு பணத்தை டெபாசிட் செய்ய வேண்டிய அவசியமில்லை.
எவ்வளவு வருமானம் கிடைக்கும்:
இந்த திட்டத்தில் ஒருவர் மாதம் 3,000 ரூபாய் சேமிக்கிறார் என்றால் அவருக்கு 15 ஆண்டுகள் முடிவில் அவர் செலுத்திய மொத்த தொகையாக 6,75,000 ரூபாய் கிடைக்கும். மேலும் அவருக்கு வட்டியாக 5,45,463 ரூபாய் கிடைக்கும். இந்த இரண்டு தொகையையும் சேர்த்து மொத்தம் 12,20,463 ரூபாய் கிடைக்கும்.
5 வருடத்தில் 5,14,175 ரூபாய் வரை அளிக்கும் சூப்பரான திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |