வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

செல்வமகள் மற்றும் PPF திட்டத்தில் சேமிப்பு வைத்திருப்பவர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள்..! இல்லையென்றால் அபராதம் கட்ட வேண்டும்..!

Updated On: March 22, 2023 7:45 AM
Follow Us:
post office ppf and ssy scheme rules in tamil
---Advertisement---
Advertisement

Post Office PPF And SSY Scheme

ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். நாம் தினமும் இந்த பதிவின் வாயிலாக போஸ்ட் ஆபிஸில் இருக்கும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கூறும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாம் இன்று போஸ்ட் ஆபிஸ் மற்றும் வங்கியில் செல்வமகள் மற்றும் PPF திட்டத்தில் சேமிப்பு வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்.

என்ன சொல்லுறீங்க போஸ்ட் ஆபீஸில் குழந்தைகளுக்கு இப்படி ஒரு அருமையான ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளதா 

Post Office PPF And SSY Scheme in Tamil: 

பொதுவாக இரண்டு திட்டமுமே நமக்கு நல்ல பலன்களை வழங்கி வருகிறது. PPF திட்டம் சிறந்த நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது மற்றும் SSA திட்டம் உங்களுக்கு அதிக வருமானத்தை வழங்குகிறது. அதனால் இந்த இரண்டுமே சிறந்த திட்டம் தான்.

ஆனால் இப்பொழுது இந்த இரண்டு திட்டத்திலும் ஒரு விதிமுறை புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. அது என்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.

Post Office PPF Scheme in Tamil: 

நீங்கள் ஒரு நீண்டகால முதலீட்டு திட்டத்தில் சேர வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு PPF (Public Provident Fund) சேமிப்பு திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை நீங்கள் டெபாசிட் செய்து உங்களின் கால அளவு முடியும் போது, நீங்கள் எவ்வளவு டெபாசிட் செய்தீர்களோ அந்த தொகையை வட்டியுடன் திரும்ப பெறமுடியும்.

அதுபோல இந்த திட்டத்தில் நீங்கள் சேமிப்பு வைத்திருந்தால் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக 500 ரூபாயாவது டெபாசிட் செய்திருக்க வேண்டும். அதாவது ஒரு வருடத்தில் 500 ரூபாயை நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்திருக்க வேண்டும்.

 இல்லையென்றால் அதற்கு அபராதமாக நீங்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இதுவரை டெபாசிட் செய்யாதவர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும்.  

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள் 👉 என்னது போஸ்ட் ஆபீஸில் குழந்தைகளுக்கு இவ்வளவு அருமையான ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளதா இத்தனை நாளா இது தெரியாம போச்சே

Post Office SSY Scheme in Tamil: 

அதுபோல உங்களின் பெண் குழந்தைகளின் பெயரில் போஸ்ட் ஆபிஸ் அல்லது வங்கியில் செல்வமகள் திட்டம் (SSY) சேமிப்பு வைத்திருந்தால் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக 250 ரூபாயாவது டெபாசிட் செய்திருக்க வேண்டும்.

 அதனால் இதுவரை இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் டெபாசிட் செய்யாதவர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் 250 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இல்லையென்றால் 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.  

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள் 👉 போஸ்ட் ஆபீஸின் அசத்தலான ஆயுள் காப்பீடு திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now