வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

5,000 ரூபாய் போஸ்ட் ஆபீஸில் செலுத்தினால் 25,82,393 ரூபாய் கிடைக்கக்கூடிய சேமிப்பு திட்டம்..!

Updated On: May 8, 2023 8:59 AM
Follow Us:
post office ppf scheme details in tamil
---Advertisement---
Advertisement

அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்கள் 

சேமிப்பு என்பது ஒன்றாக இருந்தாலும் கூட அதனை சேமிக்கும் முறை என்பது நிறைய வகையில் உள்ளது. அப்படி நாம் சேமிக்கும் தொகையினை பொறுத்து தான் நம்முடைய சேமிப்பு தொகையானது அமையும். இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் சேமிக்க வேண்டும் என்று முடிவு செய்த உடன் அதனை முதலில் ஒரு வங்கி, நிதிநிறுவனம் மற்றும் போஸ்ட் ஆபீஸில் இதுபோன்றவற்றில் முதலீடு செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் இதுபோன்றவற்றில் நாம் முதலீடு செய்யும் போது நமக்கு கூடுதலாக வட்டி தொகையும் கிடைக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் அதிக வட்டியுடன் கூடிய ஒரு அருமையான போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் பதிவை தொடர்ந்து படித்து சேமிப்பு திட்டத்தை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

இதையும் படியுங்கள்⇒ மாதந்தோறும் 500 ரூபாய் போஸ்ட் ஆபீஸில் செலுத்தினால் போதும் 2,55,185 ரூபாய் வரை பெறக்கூடிய அருமையான சேமிப்பு திட்டம்.. 

Post Office PPF Scheme Details 2023:

போஸ்ட் ஆபீஸில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் பணத்தை முதலீடு செய்து பயன்பெறலாம். மேலும் இந்த திட்டத்தில் ஒரு நபர் 1 கணக்கை மட்டுமே வைத்து கொள்ள முடியும்.

முதலீடு தொகை:

இந்த திட்டத்திற்கான குறைந்த பட்ச முதலீடு தொகை 500 ரூபாய் ஆகும். அதுவே அதிகபட்ச தொகை என்றால் அது 1,50,000 ரூபாய் ஆகும்.

வட்டி விகிதம்%:

தபால் துறையில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.10% வழங்கப்படுகிறது.

முதிர்வு காலம்:

இத்தகைய திட்டத்திற்கான முதிர்வு காலம் 15 வருடம் ஆகும். அதே நீங்கள் இதில் கணக்கை மீண்டும் தொடர வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதில் 2 வகையான விதிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

Extension With Deposit:

இந்த முறையினை நீங்கள் தேர்வு செய்தால் அடுத்த 5 ஆண்டும் குறிப்பிட்ட தொகையினை ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டி இருக்கும்.

Extension Without Deposit:

இதில் அடுத்த 5 வருடத்திற்கு எந்த விதமான தொகையும் செலுத்த தேவையில்லை. அதற்கு பதிலாக உங்களுடைய கணக்கில் உள்ள சேமிப்பு தொகைக்கு வட்டி மட்டும் உங்களுக்கு அளிக்கப்படும்.

இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் கிடைக்கும் தொகை எவ்வளவு:

PPF Scheme-ன் கீழ் நீங்கள் மாதந்தோறும் 5,000 ரூபாய் முதலீடு செய்தால் 15 வருடத்திற்கு பிறகு உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Post Office PPF Scheme Details 2023
முதிர்வு காலம்  மாதாந்திர முதலீடு தொகை  மொத்த முதலீடு தொகை  வட்டி தொகை  மொத்த தொகை 
15 வருடம் 5,000 ரூபாய் 9,00,000 ரூபாய் 6,77,840 ரூபாய் 15,77,840 ரூபாய்

 

Extension With Deposit:

இந்த முறையில் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாயினை 15 வருடத்திற்கு முதலீடு செய்தால் 15,77,840 ரூபாய் கிடைக்கும். மீண்டும் 5 வருடத்திற்கு டெபாசிட் செய்தால் வட்டியாக 7,04,553 ரூபாய் கொடுப்படுகிறது. ஆகவே 20 வருடத்திற்கு பிறகு இந்த திட்டத்தின் மூலம் 25,82,393 ரூபாய் கிடைக்கும்.

Extension Without Deposit:

அதுவே இரண்டாவது முறைப்படி 15 வருடத்தில் முடித்து கொள்ளாமல் Extension Option-ஐ மட்டும் தேர்வு செய்தால் 22,23,363 ரூபாய் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்⇒ ஏப்ரல் 4 தேதி முதல் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் ரூ.5,39,449 ரூபாய் வரை பெற முடியும்.. 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!