Post Office Public Priovident Fund Scheme in Tamil
உங்களுக்கு சேமிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் இதில் சேமிப்பது இதில் சேமித்தால் வட்டி அதிகமாக கிடைக்கும் என்ற குழப்பம் இருக்கிறது என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். தபால் துறையில் பல வகையான திட்டங்கள் உள்ளது. அதில் ஒன்றான PPF திட்டத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
PPF Scheme in Tamil:
தகுதி:
தபால் துறையின் PPF திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் பயன் பெறலாம்.
முதலீடு:
இந்ததிட்டத்தில் குறைந்த பட்ச தொகையாக 500 ரூபாயும், அதிகபட்சம் 1,50,000 ரூபாய் டெபாசிட் செய்யலாம்.
வட்டி:
இந்த திட்டத்திற்கான வட்டியாக 7.10% வழங்கப்படுகிறது.
முதிர்வு காலம்:
இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இருந்தாலும் தங்களுடைய முதிர்வு காலம் முடிவடைந்த பிறகும் தங்களுடைய சேமிப்பு கணக்கினை தொடர வேண்டும் என்று நினைத்தால் அதன் பிறகு 5 ஆண்டுகள் வரை தங்களுடைய சேமிப்பு கணக்கினை நீட்டித்து கொள்ளலாம். அதே போல் 7 ஆண்டுகள் முதலீட்டிற்கு பிறகு தங்களுடைய சேமிப்பு தொகையை எடுத்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் பயன் அடைவதற்கு தேவையான ஆவணங்கள்:
- ஆதார் கார்டு
- வாக்காளர் அடையாள அட்டை
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
எவ்வளவு லாபம் கிடைக்கும்:
மாதம் டெபாசிட் செய்ய வேண்டிய தொகை | 15 வருடத்தில் டெபாசிட் செய்த தொகை | வட்டி தொகை | மொத்தமாக கிடைக்கும் தொகை |
Rs.500/- | Rs.90,000/- | Rs.67,784/- | Rs.1,57,784/- |
Rs.1000/- | Rs.1,80,000/- | Rs.1,35,568/- | Rs.3,15,568/- |
Rs.2000/- | Rs.3,60,000/- | Rs.2,71,136/- | Rs.6,31,136/- |
Rs.5,000/- | Rs.9,00,000/- | Rs.6,77,840/- | Rs.15,77,840/- |
Rs.10,000/- | Rs.18,00,000/- | Rs.13,55,680/- | Rs.31,55,680/- |
Rs.12,500/- | Rs.22,50,000/- | Rs.16,94,600/- | Rs.39,44,600/- |
444 நாட்களில் 11,00,000 வரை பெறும் அருமையான திட்டம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |